மலேசிய தேர்தல் ஆணையம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய தேர்தல் ஆணையம்
Remove ads

மலேசிய தேர்தல் ஆணையம் (மலாய்: Suruhanjaya Pilihan Raya Malaysia (SPR); ஆங்கிலம்: Election Commission of Malaysia) (EC); என்பது மலேசியாவில் தேர்தல்கள் நியாயமான முறையில்; மற்றும் நடுநிலையான செயல்பாடுகளில் (Fair and Equitable Operations) நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மலேசிய நடுவண் அரசு சார்ந்த சட்டப்பூர்வ ஆணையம் (Malaysian Statutory Body) ஆகும்.[1]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

இந்த ஆணையம் மலேசிய அரசியலமைப்பு பிரிவு 114-இன் (Article 114 of the Federal Constitution of Malaysia) கீழ், 4 செப்டம்பர் 1957-இல் உருவாக்கப்பட்டது; மலேசியப் பிரதமர் துறையின் கீழ் இயங்குகிறது.

அந்தச் சட்டத்தின் கீழ் மலேசிய மக்களவை (Dewan Rakyat); மற்றும் மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் (State Legislative Assembly); ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்த மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப் படுகிறது.

Remove ads

வரலாறு

மலேசிய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட போது அந்த ஆணையத்தில், டத்தோ டாக்டர் முசுதபா அல்பக்ரி அசன் (Datuk Dr Mustafa Albakri Hassan) (தலைவர்) மற்றும் லீ ஈவ் பூன் (Lee Ewe Boon); திட் சிங் (Ditt Singh) ஆகிய மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.[2]

ஆணையத்தின் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கும்; அதன் முடிவுகளை அமலாக்கம் செய்வதற்கும் ஒரு செயலகம் அமைக்கப்பட்டது. தலைமை நிர்வாகியாக ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் எச். காசிடி (H. Cassidy) என்பவர் முதல் செயலாளராக நியமிக்கப் பட்டார்.

சபா சரவாக் மாநிலங்கள்

1963-இல் மலேசியா உருவான பிறகு, சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் மலேசியக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டன. சபா, சரவாக் இரு மாநிலங்களையும் சுழற்சி முறையில் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தில் மற்றோர் உறுப்பினர் சேர்க்கப் பட்டார். சரவாக்கைச் சேர்ந்த டத்தோ அபாங் மர்சுகி நோர் (Datuk Abang Marzuki Nor) என்பவர் முதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1981-ஆம் ஆண்டில் மலேசிய அரசியலமைப்பு பிரிவு 114-இல் (Article 114 of the Federal Constitution of Malaysia) ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தம் ஒரு துணைத் தலைவர் (Deputy Chairman பதவிக்கு வகை செய்தது. முதன்முதலாக அப்துல் ரகுமான் அப்துல் அசன் (Abdul Rahman Abdul Hassan) என்பவர் அந்தப் பதவியை வகித்தார்.[3]

தற்போது தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் மலேசிய ஆட்சியாளர்கள் மாநாட்டில் (Conference of Rulers), மலேசிய ஆட்சியாளர்களின் ஆலோசனைக்குப் பிறகு மலேசிய மாமன்னரால் (Yang di-Pertuan Agong) நியமிக்கப் படுகிறார்கள்.

Remove ads

அரசியலமைப்பு

மலேசிய அரசியலமைப்பு பிரிவு 114-இன் கீழ், ஆணையத்திற்கு மலேசிய நாடாளுமன்றத்தின் (Parliament of Malaysia) மலேசிய மக்களவை (Dewan Rakyat); மற்றும் மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் (Malaysian Legislative Assemblies); ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

மலேசியத் தேர்தல் தொகுதிகள்

இந்த ஆணையத்திற்கு மலேசிய நாடாளுமன்றத் தொகுதிகள்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றை வரையறுக்கும் (Delimit Constituencies) அதிகாரம் உள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் வாக்காளர் பட்டியலை திருத்துதல் (Revise the Electoral Roll); தேர்தல் நடத்தப்படும் முறையை ஒழுங்குபடுத்தும் (Regulation Manner of Elections) அதிகாரங்களும் உள்ளன.

ஆணைய உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் பதவிக்காலம் வரையில் பாதுகாக்கப் படுகிறார்கள். மேலும் மலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதியால் (Judge of Malaysia Supreme Court) மட்டுமே அவர்களைப் பதவியில் இருந்து நீக்க முடியும். ஆணைய உறுப்பினர்கள் 65-ஆவது வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

Remove ads

பொது

ஆணையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் மலேசிய ஆட்சியாளர்கள் மாநாட்டில் (Conference of Rulers), மலேசிய ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மலேசிய மாமன்னரால் (Yang di-Pertuan Agong) நியமிக்கப் படுகின்றார்கள். பொதுமக்களின் நம்பிக்கையைக் கொண்ட ஓர் ஆணையத்தை மாமன்னர் நியமிக்கின்றார்.[4]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads