மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை
மலேசிய ஆட்சியாளர்கள் மன்றம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை (ஆங்கிலம்: Conference of Rulers; மலாய்: Majlis Raja-Raja) என்பது மலேசிய மாநிலங்களின் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களையும்; மற்ற நான்கு மாநிலங்களின் ஆளுநர்களையும் (யாங் டி பெர்துவா நெகிரி) உள்ளடக்கிய ஒரு பேரவை ஆகும். மலேசிய அரசியலமைப்பு 38-ஆவது அட்டவணையின் கீழ் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.[1]
மலேசிய அரசர் (யாங் டி பெர்துவான் அகோங்); மற்றும் மலேசிய துணைப் பேரரசர் ஆகியோரைத் தேர்வு செய்வது இந்தப் பேரவையின் முக்கிய பொறுப்பு: ஆகும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்தப் பேரவை கூடுவது வழக்கம். இருப்பினும் இறப்பு, பதவி துறப்பு அல்லது பதவியில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களினால் பேரரசர்; துணைப் பேரரசர் பதவிகள் காலியாகும்போதும் இந்தப் பேரவை கூடும்.
Remove ads
பொது
மலேசிய அரசர் மற்றும் மலேசிய துணைப் பேரரசர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இந்தப் பேரவையின் நிலைப்பாடு தனித்துவமானது. எனினும், மலேசிய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வேறு சில கொள்கைகளை திருத்தி மாற்றம் செய்வதிலும் இந்தப் பேரவிற்கு பங்கு உள்ளது.
குறிப்பாக, பூர்வீக பூமிபுத்ராவின் சிறப்புச் சலுகைகள்; (மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு-ஐ பார்க்கவும்), மலாய் மொழியின் தகுதி; மற்றும் அத்தகைய சிறப்புத் தகுதிகளை நிலைநிறுத்தி உறுதி செய்வதில் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவைக்கு பங்கு உண்டு.
பங்களிப்பு
மலேசிய ஆட்சியாளர்களின் முதல் பேரவை 1948 ஆகஸ்டு 31-ஆம் தேதி கூட்டப்பட்டது. பிரித்தானியர்கள் மலாயா கூட்டமைப்பு எனும் முதல் அமைப்பை மலாயாவில் நிறுவிய 1948-ஆம் ஆண்டில் ஒன்பது மலாய் மாநிலங்களின் ஆட்சியாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது அந்தப் பேரவை அரசியலமைப்பின் கீழ் முதமுறையாக அதிகாரப்பூர்வமான நிறுவப்பட்டது. அதன் பின்னர் மலாயா சுதந்திரம் அடைந்த பிறகும் ஆட்சியாளர்களின் மாநாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.[2][3]
மலாய் மாநிலங்களான நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திராங்கானு, கெடா கிளாந்தான், பகாங், ஜொகூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களின் ஆட்சி]]யாளர்கள் மட்டுமே மலேசிய அரசர் தேர்தலில் பங்கேற்கவும், வேட்பாளர்களாக நிற்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
முக்கியமான முடிவுகள்
மலேசிய அரசர் அல்லது மலேசிய துணைப் பேரரசர் தேர்வு தொடர்பான விசயங்கள்; இசுலாம் தொடர்பான விசயங்கள்; ஆகியவற்றில் மலாய் ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் போது, மற்ற பினாங்கு, மலாக்கா, சபா சரவாக் மாநிலங்களின் ஆளுநர்கள் பங்கேற்பதில்லை
மாநாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது, ஒவ்வோர் ஆட்சியாளரும் அல்லது மாநில ஆளுநரும் அவர்களின் மாநிலத்தின் மந்திரி பெசார் அல்லது முதலமைச்சர்களுடன் வருவார்கள். மலேசிய அரசர் கலந்துகொள்ளும் போது, அவருடன் பிரதமரும் உடன் வருவார். மாநாட்டின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர் தலைமை தாங்குவார். அந்தத் தலைவர் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads