மலேசிய மூத்த அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய மூத்த அமைச்சர் (மலாய்: Menteri Kanan Malaysia; ஆங்கிலம்: Senior Minister of Malaysia மலாய்: منتري کانن مليسيا)) என்பது மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை மலேசியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த அரசியல் பதவியாக இருந்தது.
முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin), தன் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களை நியமிக்கும் வழக்கத்தை மார்ச் 2020-இல் தொடக்கி வைத்தார். அவரின் வாரிசான இஸ்மாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) இந்த நடைமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்.
ஆனால் அன்வர் இப்ராகீம் இதைப் பின்பற்றாமல் அவரின் அமைச்சரவையில் (Anwar Ibrahim Cabinet) இரு துணைப் பிரதமர்களை நியமித்து, முகிதீன் யாசின் உருவாக்கிய மூத்த அமைச்சர் பதவியை அகற்றினார்.
Remove ads
பொது
இந்த மூத்த அமைச்சர் பதவி, ஒரு துணைப் பிரதமரின் பதவியைப் போலவே இயங்க வேண்டும் என்பது முகிதீன் யாசின் எதிர்பார்த்த அரசியல் நகர்வு; அத்துடன் முகிதீன் யாசின், பிரதமராக இருந்த காலத்தில் அவர் இல்லாத காலத்தில், அப்போதைய மூத்த அமைச்சர்கள் நான்கு பேரில் ஒருவரான அஸ்மின் அலியை (Senior Minister Azmin Ali) தற்காலிகப் பிரதமராக (Acting Prime Minister) நியமித்தார்.
இருப்பினும், 7 சூலை 2021 தொடங்கி 16 ஆகத்து 2021 வரையிலான 40 நாட்களுக்கு, ஒரு குறுகிய காலத்தில், மலேசிய மூத்த அமைச்சர் பதவியும் (Senior Minister of Malaysia); மலேசிய துணைப் பிரதமர் பதவியும் (Deputy Prime Minister) ஒன்றாகவே செயல்பட்டன.
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
முகிதீன் யாசின் நிர்வாகத்தின் போது, 7 ஜூலை 2021-இல், மூத்த அமைச்சராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் துணைப் பிரதமராக பதவி உயர்த்தப் பட்டார். அதே நேரத்தில் இஸ்மாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) விட்டுச் சென்ற மூத்த அமைச்சர் பதவி இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) அவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்ற மூன்று மூத்த அமைச்சர்களும் தக்க வைத்துக் கொள்ளப் பட்டனர்.[1]
16 ஆகஸ்ட் 2021-இல் முகிதீன் யாசின் நிர்வாகம் சரிவு அடைந்தது. அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த இஸ்மாயில் சப்ரி யாகோப், துணைப் பிரதமர் எவரையும் நியமிக்கவில்லை; மூத்த அமைச்சர்களை மட்டுமே நியமித்தார்.[2]
Remove ads
நியமனம் மற்றும் அதிகாரம்
மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, 2020-இல் முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவை சற்றே மாறுபட்டது; தனித்துவம் வாய்ந்தது.
அவரின் அப்போதைய அமைச்சரவையில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) எவரும் துணைப் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை. மாறாக, அவர் நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்தார்.[3][4]
இந்த மூத்த அமைச்சர்கள், பிரதமர் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள்; மற்றும் பிரதமரின் கடமைகளை நிறைவேற்றுவதில் பிரதமருக்கு உதவுவார்கள். அந்தக் கட்டத்தில் நான்கு மூத்த அமைச்சர்களும் சமமான தகுதியில் இருந்த போதிலும், அஸ்மின் அலி மட்டும், பிரதமர் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு தகுதி வழங்கப்பட்டார்.[5]
16 ஆகஸ்ட் 2021-இல் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடம் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் பதவித் துறப்பை ஒப்படைத்த பின்னர், மலேசிய மூத்த அமைச்சர் பதவிகள் கலைக்கப்பட்டன.
Remove ads
மலேசியாவின் மூத்த அமைச்சர்களின் பட்டியல்
மலேசிய அரசியல் கட்சிகள்
பெரிக்காத்தான் நேசனல்
பாரிசான் நேசனல்
சரவாக் கட்சிகள் கூட்டணி
சான்றுகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads