மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்
Remove ads

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (ஆங்கிலம்: President of the Court of Appeal of Malaysia; மலாய்: Presiden Mahkamah Rayuan Malaysia) என்பவர் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்; மற்றும் மலேசிய நீதித்துறை அமைப்பின் துணைத் தலைவரும் ஆவார். 24 சூன் 1994-இல் மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal of Malaysia) உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தப் பதவி பயன்பாட்டில் உள்ளது.

விரைவான உண்மைகள் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் President of the Court of Appeal of MalaysiaPresiden Mahkamah Rayuan Malaysia, உறுப்பினர் ...

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (Court of Appeal) தலைவராக உள்ளார். [[மலேசியாவின் நீதித்துறை|மலேசிய நீதித்துறை அமைப்பில் மலேசியத் தலைமை நீதிபதிக்குப் (Chief Justice of Malaysia) பிறகு இது இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.

இந்த மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியைத் தொடர்ந்து மலாயா தலைமை நீதிபதி (Chief Justice of Malaya) மற்றும் சபா சரவாக் தலைமை நீதிபதி (Chief Judge of Sabah Sarawak) பதவிகள் அடுத்தநிலைப் பதவிகள் ஆகும் .[3]

Remove ads

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்கள்

  • லாமின் அஜி முகமது யூனோஸ் - (Lamin Haji Mohd Yunos)
    (1994 - 2001)[3]
  • வான் அட்னான் இசுமாயில் - (Wan Adnan Ismail)
    (2001)[3][4]
  • அகமது பைரூஸ் அப்துல் அலீம் - (Ahmad Fairuz Abdul Halim)
    (2002 - 2003)[3]
  • அப்துல் மாலிக் அகமது - (Abdul Malek Ahmad) [3]
  • அப்துல் அமீது முகமது - (Abdul Hamid Mohamad)
    (2007)[3]
  • சாக்கி முகமது அசுமி - (Zaki Mohamed Azmi)
    (2007 - 2008)[3][5]
  • அலாவுதீன் முகமது சரீப் - (Alauddin Mohd Sheriff )
    (2008 - 2011)[3][5]
  • முகமது ரவுஸ் சரீப் - (Mohamed Raus Sharif)
    (2011 - 2017)[3][6]
  • சுல்கிப்லி அகமது மகினுடின் - (Zulkefli Ahmad Makinudin)
    (2017 - 2018)[3][7]
  • அகமது மாரோப் - (Ahmad Maarop)
    (2018 - 2019)[8]
  • ரோகானா யூசுப் - (Rohana Yusuf)
    (2019 - 2022)[9][10]
  • அபாங் இசுகந்தர் அபாங் அசீம் - (Abang Iskandar Abang Hashim)
    (2023 - பதவியில் உள்ளார்)[11]
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads