மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்map
Remove ads

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (மலாய்:Mahkamah Persekutuan Malaysia; ஆங்கிலம்:Court of Appeal of Malaysia; சீனம்:马来西亚上诉法院) என்பது மலேசிய நீதித்துறை அமைப்பில் உள்ள உயர்நிலை நீதிமன்றமாகும். நீதித்துறைப் படிநிலை அமைப்பில் மலேசிய உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது உயர் நீதிமன்றமாகும். இது புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் (Palace of Justice) உள்ளது.

விரைவான உண்மைகள் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம், நிறுவப்பட்டது ...

இந்த நீதிமன்றம் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரால் (President of the Court of Appeal of Malaysia) வழிநடத்தப்படுகிறது. மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி, மலேசிய நீதித்துறையில் மலேசியத் தலைமை நீதிபதிக்குப் பிறகு இரண்டாவது நிலையில் மிக மூத்தப் பதவியாக உள்ளது.

17 சனவரி 2023-இல், அபாங் இசுகந்தர் அபாங் அசீம் என்பவர் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக யாங் டி-பெர்டுவான் அகோங் முன்னிலையில் பதவியேற்றார். மலேசியாவின் முதல் பெண் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரோகானா யூசுப், 2022-ஆம் ஆண்டில் ஓய்வு வயதை எட்டியதும் அபாங் இசுகந்தர் அபாங் அசீம் புதிய தலைவராகப் பதவியேற்றார்.[1]

Remove ads

பொது

1985-ஆம் ஆண்டுக்கு முன், மலேசிய உச்சநீதிமன்றம் மலேசியாவின் இரண்டாவது உயர் நீதிமன்றமாக இருந்தது. அந்தக் கட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சில் (Privy Council) எனும் பிரிவி உச்ச நீதிமன்றம், முதன்மை உயர் உச்ச நீதிமன்றமாக இருந்தது.[2] சனவரி 1, 1978 அன்று, குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் தொடர்பாக, இங்கிலாந்தில் இருந்த பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வது, மலேசியாவில் தடை செய்யப்பட்டன. [2]

பின்னர் 1 சனவரி 1985-இல், சிவில் வழக்குகள் தொடர்பாக பிரிவி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுகள் செய்வதும் தடை செய்யப்பட்டன. பிரிவி உச்ச நீதிமன்ற முறையீடுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், ​ மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அத்தகைய முறையீடுகளை ஏற்றுக் கொண்டது. இறுதியாக, 24 ஜூன் 1994-இல், மலேசிய உச்ச நீதிமன்றம் என்று மறுபெயரிடப்பட்டது. அதன் பின்னர் அதே 1994-ஆம் ஆண்டில் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

Remove ads

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்கள்

மேலதிகத் தகவல்கள் தலைவர், பதவியேற்பு ...
Remove ads

தற்போதைய நீதிபதிகள்

தற்போதைய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் [3]

மேலதிகத் தகவல்கள் விருது, நீதிபதி ...

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads