மழவராயர்

கள்ளர் மற்றும் வன்னியர் பட்டப்பெயர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மழவராயர் (Mazhavaraayas) எனப்படுவோர் மழநாட்டில்‌ ஆட்சி செய்தவர்கள் ஆவர்.[1]

திருச்சிராப்பள்ளி ஜில்லாவில்‌ கொள்ளிடத்திற்கு வடபால்‌ மழநாடு என்னும்‌ பகுதி இருந்தது. இது மேல்‌ மழநாடு, கீழ்‌ மழநாடு என்னும்‌ இரண்டு பிரிவுகளை உடையது. மேல்மழ நாட்டிற்குத்‌ திருத்தவத்துறை (லால்குடி) தலைநகராகவும்‌, கீழ்மழ நாட்டுக்குத்‌ திருமழபாடி தலை நகராகவும்‌ இருந்தன. இதில்‌ வாழும்‌ அந்தணர்களுக்கு மழநாட்டுப்‌ பீரகச்‌ சரணத்தார்‌ என்ற பெயர்‌ வழங்கி வருகிறது. இந்த மழ நாட்டுத்‌ தலைவர்களுக்கு மழவர்‌, மழவராயர்‌ என்ற பெயர்கள்‌ உண்டு.[2] பண்டைக்காலத்தில்‌ வாழ்ந்த மழவர்‌, வாணர்‌ முதலியோர்களை வென்றவர்களையும் மழவராயர்‌, வாணராயர்‌ எனப்‌ பெயரிட்டு அழைத்தனர்.[3]

Remove ads

சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் மழவராயர்‌

செம்பியன்மாதேவி என்பவர் சோழ மன்னன் சிவஞான கண்டராதித்தனின்‌ பட்டத்து அரசி. இவர்‌ சிற்றரசராக இருந்த மழவராயர்‌ வம்சத்தை சார்ந்தவர்‌. இவரால்‌ அமைக்கப்‌ பெற்ற பழம்பெரும்‌ சிவாலயம்‌ உள்ள ஊர் செம்பியன்‌ மாதேவி என அழைக்கப்படுகிறது.[4]

பாண்டியர் ஆட்சியில் ஐய்யன்‌ மழவராயர்‌[5][6],இராசாக்கள்‌ நாயன்‌ மழவராயர்‌[7], மாவலி வாணாதிராயர்‌ குமாரர்‌ சுந்நரத்தோளுடையாம்‌ மழவராயர்‌[8], மாதவன்‌ மழவராயர்‌ போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அரசவல்லிபுரப்‌ பற்றை மாதவச்‌ சதுர்வேதிமங்கலம்‌ எனப்‌ பெயர்‌ மாற்றிப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ பணிபுரியும்‌ பட்டர்களுக்கு மழவராயர்‌ எனும்‌ பாண்டிய அரசனின்‌ அதிகாரி வழங்கியுள்ளார்‌. மாதவன்‌ மழவராயர்‌ கைக்கோளர்‌ எனும்‌ இனப்‌ பிரிவைச்‌ சார்ந்தவராகக்‌ கல்வெட்டில்‌ குறிப்பிடப்பட்டுள்ளார்‌. [9]

Remove ads

அரியலூர் பாளையக்காரர்கள்

அரியலூரைச் சேர்ந்த பாளையக்காரர்கள் ஆவர். இவர்கள் பள்ளி அல்லது வன்னியர் சாதியைச் சேர்ந்த படையாட்சியின் துணைப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.[10][11][12] இந்த பாளையக்காரர்களின் பெயர் நாயனார் ஆகும்.

அரியலூர் மழவராயர்‌ குடியின்‌ முன்னவர்களாக இராமநயினார்‌, பூமி நயினார்‌ என்னும்‌ உடன்‌ பிறந்தோர்‌ இருவர்‌ இருந்துள்ளனர்‌. இவ்விருவரும்‌ விசயநகரப்‌ பேரரசில்‌ கசபதி வம்சத்தினரான திம்ம ராயரின்‌ காலத்தில்‌ அவர்‌ துணையுடன்‌, அரியலூர்ப்‌ பகுதியை ஆண்டு வந்தனர்‌. அரியலூரில்‌ கோயில்‌ கொண்டுள்ள ஒப்பில்லாத அம்மனின்‌ அருளால்‌, இராமநயினாரின்‌ கால்வழியினர்‌, “குன்றை ஒப்பிலாத மழவராயர்‌” என்னும்‌ பட்‌டத்தினைப்‌ புனைந்து கொண்டனர்‌. இம்மரபினைச்‌ சேர்ந்த எட்டாவது மன்னர்‌ அரங்கப்ப ஒப்பிலாத மழவராயர்‌.[1]

1735-ஆம் ஆண்டில், அரியலூரைச் சேர்ந்த ரங்கப்பா மழவராயர், ஒரு தேவாலயத்திற்கு 175 ஏக்கர் (71 ஹெக்டேர்) நிலத்தை வழங்கினார்.[13] கி.பி.1808-இல்‌ மழவராயர்‌கள்‌ அரியலூரில்‌ ஆலந்துறையார்‌ கோயில்‌, சீனிவாசப்‌ பெருமாள்‌ கோயில்‌ திருப்பணி செய்துள்ளனர்‌. மழவராயர்‌ காலத்தில்‌ உருவாக்கப்பட்ட சீனிவாசப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ கவின்மிகு தியான தசாவதாரச்‌ சிற்பங்கள்‌ உள்ளன..[14]

Remove ads

புனவாசல் பாளையக்காரர்கள்

புனவாசல் ஜமீன் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இது மழவராய பண்டாரத்தார் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்ட ஒரு ஜமீன் ஆகும். 1879 ஆண்டில் 2527 ஏக்கர் பரப்பளவோடு இருந்த ஜமீன், அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி  350 ரூபாய் 15 அணா 7 பைசா ஆகும்.[15][16][17]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பட்டு மழவராயர் எனும்‌ கள்ளர் குழுத்தலைவன்‌ வாழ்ந்ததாகவும்‌ அவரால்‌ கோட்டைக்‌ கட்டப்பட்டதாகவும்‌ தஞ்சை அரசுப்‌ பதிவேட்டில்‌ கூறப்பட்டுள்ளது. [4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads