கோம்பாக் எல்ஆர்டி நிலையம்

கோம்பாக் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

கோம்பாக் எல்ஆர்டி நிலையம்map
Remove ads

கோம்பாக் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Gombak LRT Station; மலாய்: Stesen LRT Gombak; சீனம்: 鹅唛) என்பது மலேசியா, சிலாங்கூர் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். முன்பு தெர்மினல் புத்ரா என்று அழைக்கப்பட்ட இந்த நிலையம் கிளானா ஜெயா வழித்தடத்தின் வடக்கு முனையமாக உள்ளது.[2][3]

விரைவான உண்மைகள் KJ1 கோம்பாக், பொது தகவல்கள் ...

இந்த நிலையத்தில் கெந்திங் மலை பேருந்துகளுக்கான பயணச்சீட்டு வழங்குமிடம் உள்ளது. ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை கெந்திங் இஸ்கைவே நிலையத்திற்கு பேருந்துகள் புறப்படும். இந்தப் பேருந்துகளை ரிசோர்ட்ஸ் ஓர்ல்ட் (Resorts World Berhad) எனும் நிறுவனம் இயக்குகிறது.[4].

Remove ads

பொது

கோலாலம்பூரில் வசிப்பவர்கள், குறிப்பாக செதாபாக் பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள், கெந்திங் மலைக்குச் செல்லும்போது, ​​இந்த நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் தொடக்கம், இந்த நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, ​​இந்த நிலையம் ரேபிட் கேஎல் போக்குவரத்து வலையமைப்பில் ஆக வடக்கே உள்ள நிலையமாகும்.[5]

இணைப்புகள்

  • ஜாலான் (Jalan) எனும் சொல் மலேசியாவில் சாலை என்பதைக் குறிப்பிடுவதாகும்.
மேலதிகத் தகவல்கள் வழி எண்., வழி ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads