மாடிவீட்டு மாப்பிள்ளை

From Wikipedia, the free encyclopedia

மாடிவீட்டு மாப்பிள்ளை
Remove ads

மாடி வீட்டு மாப்பிள்ளை (Maadi Veettu Mappilai) என்பது எஸ். கே. ஏ. சாரி இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1][2] இது இல்லரிக்கம் (1959) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[3] இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் நாகேஷ், ரமா பிரபா, வி. கே. ராமசாமி, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், டி. எஸ். முத்தையா, உதய சந்திரிகா, பி. கே. சரஸ்வதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 1967 சூன் 23 அன்று வெளியானது.

விரைவான உண்மைகள் மாடி வீட்டு மாப்பிள்ளை, இயக்கம் ...
Remove ads

கதை

சோமு தனது தாய் மாமன் தர்மலிங்கத்தின் உதவியுடன் படித்துவருகிறார். அவர் பணக்காரராண சிவஞானத்தின் மகளான மீனாவை காதலிக்கிறார். இந்தக் காதல் மீனாவின் தாய்க்குப் பிடிக்கவில்லை என்றாலும் சிவஞானத்தின் சம்மதத்துடன் சோமுவும், மீனாவும் திருமணம் செய்துகொள்கின்றனர். சோமு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். மாப்பிளையை பிடிக்காத சிவஞானத்தின் மனைவி, மருமகனை அவமதிக்கிறார். இதற்கிடையில் அவரின் உறவினரின் மகனான பாலு சிவஞானத்தின் சொத்துக்களை அபகரிக்க திடமிடுகிறான். பாலு ஏற்கனவே சீதாவை ரகசியமாக மணந்துள்ளான். மேடையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் போது, ​​சோமு தான் இறந்துவிட்டதாகக் கருதிய தன் தங்கை சீதாவைக் காண்கிறார். அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்று தெரியாமல், மீனா சோமுவை சந்தேகிக்கிறாள். பாலுவும் அவரது தந்தையும் சோமுவுக்கும் மீனாவுக்கும் இடையில் சிக்கல்களை உருவாக்குகின்றனர். இதனால் சோமுவும், மீனாவும் பிரிகின்றனர். சோமு எவ்வாறு அனைத்து சிக்கல்களையும் தீர்த்து குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்கிறார் என்பதே கதையாகும்.

Remove ads

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு டி. சலபதி ராவ் இசையமைத்தார்.

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர் ...

வெளியீடும் வரவேற்பும்

மாடி வீட்டு மாப்பிள்ளை 1967 சூன் 23 அன்று வெளியானது.[5][6] படத்தை ஸ்ரீ விநாயகா மூவீஸ் விநியோகித்தது.[7] படத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதிலும் அதன் நகைச்சுவை அவற்றை மறைத்துவிட்டதாக கல்கி குறிப்பிட்டது.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads