உதய சந்திரிகா

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

உதய சந்திரிகா
Remove ads

உதய சந்திரிகா (Udaya Chandrika) என்பவர் 1960 களின் நடுப்பகுதியிலிருந்து 1970 களின் நடுப்பகுதி வரை கன்னடத் திரைப்படங்களில் நடிகையாக இருந்தவராவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் உதய சந்திரிகா, தேசியம் ...

தொழில்

உதய சந்திரிகா 1966 இல் வெளியான கட்டாரி வீராவில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தப் படத்தில் டாக்டர் ராஜ்குமாரின் காதலியாக நடித்தார். கன்னடப் படங்களில் பல வேடங்களில் நடித்த இவர், 1979 ஆம் ஆண்டு கல்யாண் குமாரின் உடுகோரில் கடைசியாக நடித்தார்.

கன்னடத்தில் டாக்டர். ராஜ்குமார், கல்யாண் குமார், உதய்குமார், ராஜேஷ், விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், ரஜினிகாந்த் போன்ற இவரது காலத்தின் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் நடித்தார். பிற மொழிகளில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், பிரேம் நசீர், கிருஷ்ணா ஆகியோருடன் பணியாற்றினார். [1]

இவர் தனது சந்திரிகா பிலிம்ஸ் பதாகையின் கீழ் விஷ்ணுவர்தன் நடித்த அசத்யா அலியா , சங்கர் நாக் நடித்த கிலாடி அலியா ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்தார்.

தில்லானா மோகனாம்பாள், கட்டாரி வீரா, தூமகேது, பூபதி ரங்கா, அஞ்சுசுந்தரிகள், பட்டுக்குண்டே லக்ஷா போன்றவை இவரது புகழ்பெற்ற படங்களாகும்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads