மாண்புமிகு
பெயருக்கு முன் வரும் மரியாதைக்கான முன்னொட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
'மாண்புமிகு' ( The Honourable, (சுருக்கமாக: Hon., Hon'ble) என்பது ஒரு கௌரவமிக்க அடைமொழி ஆகும். இது பொதுவாக அரசு அல்லது தூதரகப் பதவிகளை வகிக்கும் சிலரின் பெயர்கள் அல்லது பதவிகளுக்கு முன் முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.
அரசாங்கங்களின் பயன்பாடு
சர்வதேச இராசதந்திரம்
பன்னாட்டு இராசதந்திர உறவுகளில், வெளி நாடுகளின் பிரதிநிதிகள் பெரும்பாலும் "மாண்புமிகு" என்ற முன்னொட்டுடன் அழைக்கப்படுகின்றனர். தூதரகத்தின் துணைத் தூதர்கள், பொறுப்பாளர்கள், தூதர்கள்-ஜெனரல்கள், கௌரவத் தூதர்களுக்கு எப்போதும் இந்த முன்னொட்டு வழங்கப்படுகிறது. அனைத்து தூதரகத் தலைமைப் பதவிகளில் உள்ளவர்களும், அவர்கள் கௌரவப் பதவிகளில் இருந்தாலும் சரி அல்லது தொழில்முறை பதவிகளில் இருந்தாலும் சரி, அமெரிக்க வெளியுறவுத் துறையின்படி இந்த கௌரவ முன்னொட்டைப் பெறுகிறனர். [1] இருப்பினும், மாண்புமிகு (தி ஹானரபிள்) என்பதற்குப் பதிலாக எக்ஸலன்சி என்ற கௌரவ முன்னொட்டு தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில்
இந்தியாவில், இந்திய உயர் நீதிமன்ற மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு ( Hon'ble ) என்ற முன்னொட்டுடன் அழைக்கப்படுகிறனர்; [2] பெரும்பாலும் Honourable என்பதை "HMJ" என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர், அதாவது, மாண்புமிகு திரு/திருமதி. நீதி, அதைத் தொடர்ந்து அவர்களின் பெயர் என்று அழைக்கபடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத் தலைவர்கள் ( பிரதமர், குடியரசுத் தலைவர், இந்திய துணைக் குடியரசுத் தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், ஆளுநர்கள் ) ஆகியோரின் பெயருக்கு முன்னாள் மாண்புமிகு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறனர்.
மலேசியா, சிங்கப்பூர்
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழில் மாண்புமிகு என்பதற்கு பதிலாக மாட்சிமை தாங்கிய என்ற அடைமொழி வழங்கப்படுகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads