மாதரத்தின் சஞ்சயன்

மாதர இராச்சியத்தின் அரசன் From Wikipedia, the free encyclopedia

மாதரத்தின் சஞ்சயன்
Remove ads

சஞ்சயன் ( Sanjaya ) (கி.பி. 716 746) நரபதி ராஜா ஸ்ரீ சஞ்சயா ( காங்கல் ) என்றும் ரகாய் மாதரம் சா ரது சஞ்சயா என்றும் கல்வெட்டின் மூலம் அறியப்படும் இவர் எட்டாம் நூற்றாண்டில் மாதரம் இராச்சியத்தை நிறுவியவர். நடுச் சாவகத்தில் தெற்கு கெது சமவெளியில் (சுமார் 340 மீ (1,120 அடி உயரம்) கொண்ட குனுங் வுக்கிர் கோயிலில் காணப்படும் ஒரு கல்லில் இவரது பெயர் சமசுகிருத மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.[1]:87–88 [2]

Thumb
காங்கல் கல்வெட்டு, மாதரத்தின் மன்னர் சஞ்சயனைப் பற்றி குறிப்பிடப்பட்ட ஆரம்பகால கல்வெட்டு
Remove ads

வரலாறு

சஞ்சயனின் வரலாற்றைப் பற்றியும் இவரது வாரிசுகளைப் பற்றியும் பாலிதுங் சாசனத்திலும் வனுவா தெங்கா III கல்வெட்டிலும் காணப்படுகிறது. மாண்டியாசிக் கல்வெட்டில், 'பாலிதுங் கெரட்டன்' (ஒருவகை அரண்மனை கட்டுபவர்கள் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிதுங்கின் வாரிசான தக்சனின் பல கல்வெட்டுகள், சஞ்சயனுடன் சேர்ந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[3]

சஞ்சயன் மாதரம் இராச்சியத்தின் நிறுவனராகவும் முதல் அரசர் என்றும் அறியப்படுகிறார். [4] மன்னன் சஞ்சய சாகாவின் பெயர், காரிதா பராஹ்யங்கனின் (அல்லது பராஹ்யங்கன் கதை) பழைய காதல் மற்றும் புராணமயமாக்கப்பட்ட சுண்டா கையெழுத்துப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது,இதில் சஞ்சய காலுவின் சுண்டானிய மன்னர் நாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். [5]

Remove ads

சஞ்சய வம்சம் அல்லது சைலேந்திர வம்சம்

சஞ்சய வம்சத்தின் முன்னோடியாக சஞ்சயனை வரலாற்றாசிரியர் போஷ் பரிந்துரைத்தார். மேலும் நடுச் சாவகத்தை பௌத்த சைலேந்திர வம்சம் எனவும் சைவ சஞ்சய வம்சம் எனவும் இரண்டு வம்சங்கள் ஆண்டு வந்தன. [6] சஞ்சயன் சைவ மதத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. பிந்தையது சஞ்சய வம்சத்தால் கிழக்கு நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என பழைய சீனக் கணக்குக் கூறுகிறது. இது சஞ்சயனை சி-யென் என்று பெயரிட்டது. [4]

இன்னும் பிற வரலாற்றாசிரியர்கள் சஞ்சய வம்சம் என்று எதுவும் இல்லை என்று வாதிட்டனர். ஏனெனில் நடுச் சாவகத்தை ஆண்ட ஒரே ஒரு வம்சமாக சைலேந்திர வம்சத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோட்பாடு போயர்பட்ஜரகாவால் முன்மொழியப்பட்டது போஹ் பிடு பகுதியில் தலைநகராகக் கொண்ட இந்த இராச்சியம் மாதரம் என்று அழைக்கப்பட்டது. மேலும் சைலேந்திர வம்சத்தின் ஆட்சியாகும். சஞ்சயனும் இவனது சந்ததிகள் அனைவரும் சைவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறுகிறார். மகாயான பௌத்தத்துடன் சைலேந்திரர்களின் தொடர்பு மன்னன் சங்கரா (ரகாய் பனரபன் அல்லது பனங்கரன்) புத்த மதத்திற்கு மாறிய பிறகு தொடங்கியது. [7]

Remove ads

காங்கல் கல்வெட்டு

காங்கல் கல்வெட்டின் படி, சஞ்சயன் குஞ்சரகுஞ்சா மலையில் ஒரு இலிங்கத்தை ( சிவனின் சின்னம்) நிறுவினார். யவத்வீபம் ( சாவகம் ) என்ற உன்னதத் தீவில் 'இலிங்கம் அமைந்திருந்தது. இது ஏராளமான அரிசி மற்றும் தங்கத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக கல்வெட்டு விவரிக்கிறது. யவத்வீபம், ஞானம் மற்றும் நல்லொழுக்கமுள்ள மன்னன் சன்னாவின் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக இருந்ததாக கல்வெட்டு கூறுகிறது. ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு குழப்பமான காலகட்டத்திற்கு மத்தியில், இளவரசி சன்னகாவின் (மன்னர் சன்னாவின் சகோதரி) மகன் சஞ்சயன் அரியணை ஏறினார். சஞ்சயன் புனித நூல்கள், தற்காப்பு கலைகள் மற்றும் இராணுவ வலிமையை வெளிப்படுத்தினார். அண்டை பகுதிகளை கைப்பற்றிய பிறகு இவரது ஆட்சி அமைதியாகவும் வளமாகவும் இருந்தது. [8]

இந்த கல்வெட்டு சஞ்சயனை சாவகத்தின் முந்தைய மன்னர் சன்னாவின் முறையான வாரிசாக விவரிக்கிறது. சன்னாவின் இராச்சியம் ஒற்றுமையின்மையில் விழுந்த பிறகு, சஞ்சயன் இராச்சியத்தை மீண்டும் ஒன்றிணைத்து அரியணை ஏறுகிறான். ஒரு சிவலிங்கத்தை நிறுவுவதன் மூலம் அவர் புதிய அதிகாரம், அரசியல் அதிகாரத்தின் புதிய மையம் அல்லது அரச அரண்மனையை ( கிராடன் ) நிறுவி தன்னை நிரூபிக்கிறார். சஞ்சயன் அரியணை ஏறியது உகிர் கல்வெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உகிர் மலை மாதரம் இராச்சியத்தின் முதல் மையமாக இருந்தது என்றும் கூறுகிறது. சஞ்சயன் அல்லது அவரது வாரிசான பனக்கரன் (கி.பி. 746 784) பின்னர் கி.பி. 742 755 க்கு இடையில் தனது மையத்தை நகர்த்தினார். இது ஒரு சீன ஆண்டு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. [4]

கரிதா பராஹ்யங்கன்

கரிதா பராஹ்யங்கனின்படி ( சுந்தா இராச்சியத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு புத்தகம்), சஞ்சயன், காலுவின் மன்னர் சன்னா மற்றும் இளவரசி சன்னாவின் மகன்.

மன்னன் சன்னாவை அவனது உறவினரான புரபசோரா தோற்கடித்தார். இதன் விளைவாக, சன்னா தனது மனைவியின் பாட்டியின் இராச்சியமான கலிங்க இராச்சியத்திர்கு பின்வாங்க வேண்டியிருந்தது. தந்தையின் தோல்விக்குப் பழிவாங்க சஞ்சயன் ஒரு சிறப்புப் படையைத் திரட்டத் தொடங்கினான். இதற்கிடையில், சுந்தாவின் மன்னரும், சன்னாவின் நல்ல நண்பருமான தருஸ்பாவா, சஞ்சயனை தனது மருமகனாக ஏற்றுக்கொண்டார். எனவே, சஞ்சயனின் சிறப்புப் படை, சுந்தா படையுடன் இணைந்து, புரபசோராவின் அரசைத் தாக்கி, அவனது குடும்பத்துடன் அவனைக் கொன்றது.

அதன்பிறகு, சஞ்சயன் சுந்தா (அவரது மாமனாரிடமிருந்து), காலு (அவரது தந்தையிடமிருந்து) மற்றும் கலிங்கம் (அவரது பாட்டியிடம் இருந்து) இராச்சியங்களை ஒன்றிணைத்து மாதரம் இராச்சியத்தை நிறுவினார். எனவே, இவரது முடிசூட்டுதலுடன், கிழக்கு சாவகம், மேற்கு சாவகம், நடுச் சாவகம் மற்றும் பாலி ஆகியவை ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கப்பட்டன.

Remove ads

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads