நிவாதகவசர்கள்

From Wikipedia, the free encyclopedia

நிவாதகவசர்கள்
Remove ads

நிவாதகவசர்கள் (சமசுகிருதம்|निवातकवच|lit=ஊடுருவ முடியாத கவசங்களுடையவர்கள்), காசியபர்-பூலோமா தம்பதியர்களுக்கு பிறந்த தைத்திய குலத்தினர் ஆவார்.தைத்தியர்களின் எண்ணிக்கை 30 மில்லியன் ஆவார். இந்து தொன்மவியலில் இவர்களை அசுரர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.. நிவாதகவசர்கள் மாயஜாலம் மற்றும் போர்த்திறனில் திறமையானவர்கள். மேலும் தங்கள் எதிரிகளை தோற்கடிக்க சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டவர்கள்..இவர்கள் தேவர்கள், இராவணன் மற்றும் அருச்சுனன் ஆகியோர்களுடன் போரிட்டவர்கள். குருச்சேத்திரப் போரில் நிவாதகவசர்கள் அருச்சுனனால் கொல்லப்பட்டனர்.[1] இவர்களது நெருங்கிய உறவினர்கள் காலகேயர்கள். நிவாதகவசர்கள் குறித்த தகவல்கள் இராமாயணம் மற்றும் மகாபாரத்தில் கூறப்பட்டுள்ளது.

Thumb
மாதலி தேர் ஓட்ட, அருச்சுனன் நிவாதகவசர்களுடன் போரிடும் காட்சி
Remove ads

இதிகாசங்களில்

இராமாயணம்

இராமாயணத்தில் நிவாதகவச்சர்கள் உலகைப் பயமுறுத்தியதாகவும், கடலுக்கு அடியில் வாழ்ந்து, பிரம்மாவிடமிருந்து வரங்களைப் பெற்ற பிறகு மாநிமதி நகரில் வசித்ததாக கூறப்படுகிறது. இராமாயணத்தில், இராவணன் தனது மகன்களான இந்திரஜித், அதிகாயன் மற்றும் தனது படைகளுடன் இந்த தைத்தியர்களான நிவாதகவசர்களைத் தாக்கினான். பிரம்மாவின் வரம் காரணமாக, அவனால் நிவாதகவசர்களை முழுமையாகக் கொல்ல முடியவில்லை. இறுதியில் பிரம்மா தலையிட்ட பிறகு இரு தரப்பும் ஒரு கூட்டணியை உருவாக்கியது.[2]

மகாபாரதம்

மகாபாரதத்தில், இந்திரன் தன் அம்சமான பிறந்த அருச்சுனன் மூலம் பாதாளத்தில் கோட்டைக் கட்டி வாழும் தேவர்களின் எதிரிகளான 30 மில்லியன் நிவாதகவசர்களை அழிக்க முயன்றான். இப்பணியில் இந்திரனின் தேரோட்டியான மாதலி, அருச்சுனனின் தேரோட்டியாக பணி செய்தான். அருச்சுனன் போருக்கு செல்கையில் தேவர்கள் அருச்சுனனுக்கு தேவதத்தா என்ற சங்கு ஒன்றை வழங்கினர். இருவரும் தைத்தியர்களின் நகரதத்தை அடைந்ததும், அருச்சுனன் சங்கு ஊதும்போது, நிவாதகவசர்கள் அருச்சுனன் மீது திரிசூலங்கள், ஈட்டிகள் மற்றும் அம்புகளை வீசினர். அருச்சுனன் தனது காண்டீபத்திலிருந்து அம்புகளை எய்து, ஆயிரக்கணக்கான தைத்தியர்களைக் கொன்றான். நிவாதகவச்சர்கள் மாயாஜாலம் செய்து அருச்சுனனின் கண்ணுக்கு தெரியாமல், அருச்சுனன் மீது கனைகளைத் தொடுத்தனர். நிவாதகவசர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அருச்சுனன் தவிக்கும் வேளையில், மாதலி தன்னுடன் கொண்டு வந்த இடியுடன் கூடிய கணைகளைப் பயன்படுத்துமாறு வற்புறுத்தினார். அவ்வாறே அருச்சுனன் செய்த போது, அந்த ஆயுதம் தைத்தியர்களை வென்றது.. ஆனால் பிரம்மா நிவாதகவசர்களுக்கு வழங்கிய வரம் காரணமாக தைத்தியர்கள் காப்பாற்றப்பட்டனர். பிறகு அருச்சுனன் இந்திராதி தேவர்களின் பகைவர்களான காலகேயர்களை போரில் வென்றார்.[3][4]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads