பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் தலைநகரமான சென்னையில் அமைந்த பெருநகர சென்னை மாநகராட்சி 1688-இல் நிறுவப்பட்டது.[1][2][3] பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களும் 200 வார்டுகளையும் கொண்டது.[4]

வரலாறு

Thumb
சென்னை மாவட்டத்தின் 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும்

2011-க்கு முன்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும் முன், 174 km2 (67 sq mi) பரப்பளவு கொண்டிருந்தது; சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 km2 (164 sq mi) ஆக இரட்டிப்பு ஆனது.

சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் 7 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 நகராட்சிகளும்; 5 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் 12 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.[5]

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சிகள்

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 நகராட்சிகள் விவரம்:ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிகள்

சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர்

சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 25 கிராம ஊராட்சிகள்

இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், வைக்காடு, மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, மஞ்சம்பாக்கம், கொசப்பூர், நொளம்பூர், நெற்குன்றம்,ராமாபுரம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்-துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மண்சேரி, உத்தண்டி.[5]

விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களுடன், 15 மண்டலங்களும், 200 வார்டுகளையும் கொண்டுள்ளது.[6]பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளிலும், பழைய சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது.[7] செப்டம்பர் 2011-ன் நிலவரப்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், 26 வார்டுகள் பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடி மக்களுக்கும், 58 வார்டுகள மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[7]

Remove ads

மண்டலங்கள்

Thumb
பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்குப் பின்னர் உள்ள 15 மண்டலங்கள்
மேலதிகத் தகவல்கள் வ.எண்., மண்டலம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads