மாத்ரிக பிரசாத் கொய்ராலா

நேபாள அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

மாத்ரிக பிரசாத் கொய்ராலா
Remove ads

மாத்ரிக பிரசாத் கொய்ராலா (Matrika Prasad Koirala) (நேபாளி: मातृका प्रसाद कोइराला Listen; (1 சனவரி 1912 – 11 செப்டம்பர் 1997)[1] இரண்டு முறை நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[2]

விரைவான உண்மைகள் மாத்திரிக பிரசாத் கொய்ராலா मातृका प्रसाद कोइराला, ஐக்கிய அமெரிக்காவுக்கான நேபாளத் தூதுவர் ...
Remove ads

தனி நபர் வாழ்க்கை

கிருஷ்ண பிரசாத் கொய்ராலா - மோகனகுமாரி இணையருக்கு 1912ல் வாரணாசியில் பிறந்தவர். இவரது உடன்பிறப்புகளான விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மற்றும் கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளத்தின் பிரதம அமைச்சர்களாக இருந்தவர்கள். இவரது மூன்றாவது உடன்பிறப்பான தாரினி பிரசாத் கொய்ராலா ஊடகவியளராக பணியாற்றியவர்.

அரசியல் பணி

நேபாள இராச்சியத்திலிருந்து, பிரித்தானிய இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட தன் தந்தையுடன், மாத்திரிக பிரசாத் கொய்ராலா, தன் தம்பியர்களுடன் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்து 1930களில் மூன்று மாதம் சிறை சென்றவர்.[3] வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, பீகார் மாகாணத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததால், மாத்திரிக பிரசாத் கொய்ராலா, பிகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் நியமிக்கப்பட்டார்.

பின்னர் நேபாள இராச்சியத்திற்கு சென்று, ராணா வம்ச பிரதம அமைச்சர்களுக்கு எதிராக, தங்க பிரசாத் ஆச்சாரியா தலைமையில் போராட்டங்களில் பங்கெடுத்தார். ஏப்ரல் 1950ல் மாத்திரிக பிரசாத் கொய்ராலா நேபாளி காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவரானார்.[4] 1951ல் நேபாள இராச்சியத்தில் ராணா வம்ச பரம்பரை பிரதமர் ஆட்சி முடிவுக்கு வந்த போது, மாத்திரிக பிரசாத் கொய்ராலா, நேபாள காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதம அமைச்சராக 16 நவம்பர் 1951 முதல் 14 ஆகஸ்டு 1952 முடிய பதவி வகித்தார்.

1952ல் மாத்திரிக பிரசாத் கொய்ராலா நேபாள அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டார் எனக் குற்றம் சாட்டபப்ட்டு நேபாள காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.[5]

பின்னர் நேபாள பிரஜா கட்சியின் சார்பாக, 15 சூன் 1953 முதல் 14 ஏப்ரல் 1955 முடிய, மாத்திரிக பிரசாத் கொய்ராலா இரண்டாம் முறையாக பிரதம அமைச்சர் பதவி வகித்தார்.

மாத்திரிக பிரசாத் கொய்லாரா, ஐக்கிய நாடுகள் அவையில் நேபாளத்தின் பிரதிநிதியாகவும், 1961 - 1964 முடிய ஐக்கிய அமெரிக்காவில் நேபாளத் தூதுவராகவும் பணியாற்றினார்.[6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads