மாம்பழச்சிட்டு

பறவை இனம் From Wikipedia, the free encyclopedia

மாம்பழச்சிட்டு
Remove ads

மாம்பழச்சிட்டு அல்லது மஞ்சள் சிட்டு (Common Iora - Aegithina tiphia) என்பது வெப்பமண்டல இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தெற்காசியா முழுவதும் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும். இப்பறவைகளின் இறகுகளில் மாறுபாடுகள் உள்ளன, அவற்றில் சில துணையினங்களாக குறிப்பிடப்படுகின்றன.

விரைவான உண்மைகள் மாம்பழச்சிட்டு, காப்பு நிலை ...
Remove ads

வகைப்பாடு

மஞ்சள் சிட்டில் பதினொரு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • இலங்கை மஞ்சள் சிட்டு A. t. multicolor (Gmelin, JF, 1789) – தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கை
  • தெற்கத்திய மஞ்சள் சிட்டு A. t. deignani Hall, BP, 1957 – தெற்கு, கிழக்கு இந்தியா மற்றும் வடக்கு, மத்திய மியான்மர்
  • A. t. humei Baker, ECS, 1922 – மத்திய தீபகற்ப இந்தியா
  • A. t. tiphia (Linnaeus, 1758) – வட இந்தியா முதல் மேற்கு மியான்மர் வரை
  • A. t. septentrionalis Koelz, 1939 – வடமேற்கு இமயமலை
  • A. t. philipi Oustalet, 1886 – தெற்கு-மத்திய சீனா, கிழக்கு மியான்மர், வடக்கு தாய்லாந்து மற்றும் வடக்கு, மத்திய இந்தோசீனா
  • A. t. cambodiana Hall, BP, 1957 – தென்கிழக்கு தாய்லாந்து, கம்போடியா மற்றும் தெற்கு வியட்நாம்
  • A. t. horizoptera Oberholser, 1912 – தென்கிழக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு தாய்லாந்து, மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் அருகிலுள்ள தீவுகள்
  • A. t. scapularis (Horsfield, 1821) – சாவகம் மற்றும் பாலி
  • A. t. viridis (Bonaparte, 1850) – மத்திய, தெற்கு போர்னியோ
  • A. t. aequanimis Bangs, 1922 – வடக்கு போர்னியோ மற்றும் மேற்கு பிலிப்பைன்ஸ்
Remove ads

அளவும் இயல்புகளும்

மாம்பழச்சிட்டின் கூப்பாடு இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் ( 14 செமீ [[3]] ). ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும்.[4] மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.

Remove ads

குறிப்புதவி

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads