மாரியம்மன்
தென்னிந்திய நாட்டுப்புற பெண் தெய்வம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாரியம்மன் (Mariamman) என்பவர் ஒரு தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பெண் தெய்வம் ஆவார். இவர் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.



Remove ads
தொன்மக் கதை
மாரியம்மன் குறித்த கதையில் தொன்மக் கதைகளும், நாட்டுப்புற நம்பிக்கைகளும் கலந்துள்ளன. ரைவத ராஜன் என்ற மன்னனின் மகள் ரேணுகாம்பாள். அவளுக்கும் ஜமதக்கினி முனிவருக்கும் மணமாகிறது. இந்த இணையருக்கு பரசுராமன் என்ற மகன் பிறக்கிறான். ரேணுகா தன் கற்பின் ஆற்றலால் அபாரமான சக்தியைக் கொண்டிருக்கிறாள். அவள் வெறுங்கையோடு 'பத்ம சரஸ்' என்ற சுனைக்குப் போய்த் தனது சக்தியால் தண்ணீரையே ஒரு குடமாகச் செய்து அதில் தனது கணவரின் சடங்குகளுக்கு வேண்டிய நீரைக் கொண்டுவருவாள்.
ஒரு நாள் அவள் அச்சுனைக்கு வழக்கப்படி தண்ணீரைக் கொண்டுவரச் சென்ற பொழுது அங்கு வானில் சென்ற அழகுவாய்ந்த கந்தர்வன் ஒருவனைக் காண்கிறாள். இதனால் அவளது கற்பினால் பெற்ற ஆற்றலை இழக்கிறாள். இதனால் முன்போல் நீரைக் கொண்டு குடம் செய்ய அவளால் முடியாமல் போகிறது. இதை அறிந்த ஜமதக்கினி கோபமூண்டு மகன் பரசுராமனை அழைத்து அவனது தாயின் தலையைது துண்டிக்குமாறு கட்டளை இடுகிறார். பரசுராமரும் தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுகிறார். இதனால் திருப்தியடைந்த ஜமதக்கியும் பரசுராமனைப்பார்த்து ஏதாவது வரம் வேண்டுமா என கேட்கிறார். அவர் தன் தாயார் உயிர் பெற வேண்டுமெனக் கேட்கிறார். ஜமதக்கியும் அவளை உயிர்பிக்க தனது அற்புத சக்திகொண்ட தீர்த்தத்தை பரசுராமனிடம் கொடுத்து அவளை உயிர்ப்பிக்குமாறு சொல்கிறார். பரசுராமர் தான் தனது தாயாரைக் கொல்லப் போன பொழுது அதைத் தடுத்த ஒரு பறையர் பெண்ணையும் தலை துண்டித்துக் கொன்று, தன் தாயாரையும் தலை துண்டித்துக் கொன்றிருந்தார்.[1] தந்தை அளித்த வரத்தினால் மகிழ்ந்த பரசுராமரர் அங்குகிடந்த முண்டங்களையும் தலைகளையும் ஒன்று சேர்த்த போது தவறாகத் தனது தாயாரின் தலையைச் பறையர் பெண்ணின் உடலுடனும் பறையப் பெண்ணின் தலையைத் தனது தாயாரின் உடலுடனும் சேர்த்துவிட்டார். உயிர்பெற்ற இரண்டு பெண்களுள் யாரைத் தனது தயாராகக் கருதுவதெனத் தெரியாது தயங்கிய பரசுராமரைப் பார்த்து ஜமதக்கியும் மனித உடலிலேயே முக்கியமானது தலையேயாகையால் எந்த பெண்ணின் உடலில் தனது மனைவியின் தலையிருந்ததோ அவளையே அவன் தனது தாயாராகக் கொள்ள வேண்டு மெனக் கூறினார். மற்றொரு பெண்ணுக்கு மாரியம்மன் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் ரேணுகாம்பாளுக்கு பணியாளராக நியமிக்கப்பட்டார்.[1]
Remove ads
புகழ்பெற்ற கோயில்கள்
இந்தியா
தமிழகம்
- சமயபுரம் மாரியம்மன் கோயில் - திருச்சி
- நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் - புதுக்கோட்டை
- திருவப்பூர் முத்துமாரியம்மன் - புதுக்கோட்டை
- கீழத்தெரு மாரியம்மன்[2] - சிதம்பரம்
- மேலத்தென்குடி தெற்கு மாரியம்மன் - தென்குடி
- கொன்னையூர் முத்துமாரியம்மன் - புதுக்கோட்டை
- பண்ணாரி மாரியம்மன் கோயில் - ஈரோடு
- இருக்கன்குடி மாரியம்மன் கோயில் - விருதுநகர்
- மறுகால் குறிச்சி துர்கா மாரியம்மன் கோவில் - திருநெல்வேலி
- வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் - மதுரை
- திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் - மதுரை
- நத்தம் மாரியம்மன் கோயில்
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் - தேனி
- புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் - தஞ்சாவூர்
- சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் - சேலம்
- திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் -திண்டுக்கல்
- கணவாய் மாரியம்மன் திருக்கோயில் - தர்மபுரி
- ஓட்டங்காடு மாரியம்மன் திருக்கோயில் - நாகப்பட்டினம்
- வேதாளை-வலையர்வாடி சக்தி மாரியம்மன் கோவில்
- திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில்
- பொன்னியேந்தல் அருள்மிகு ஜெகமாரியம்மன் கோவில்
- பழனி மாரியம்மன் கோவில்
- உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில்
- கொழுமம் அருள்மிகு கோட்டை மாாியம்மன்கோவில்
- கோயம்புத்தூர் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில்
இலங்கை
மற்ற நாடுகள்
- சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் (சிங்கப்பூர்)
- பாங்காக் மகா மாரியம்மன் கோயில் (தாய்லாந்து)
- பிரிட்டோரியா மாரியம்மன் கோயில் (தென்னாப்பிரிக்கா)
- ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில் (வியட்நாம்)
- மகா மாரியம்மன் கோயில், மிட்லண்ட்ஸ், கோலாலம்பூர் (மலேசியா)
- மகா மாரியம்மன் கோயில், குயின் ஸ்ட்ரீட், பினாங்கு (மலேசியா)
- மகா மாரியம்மன் கோயில், ஜாலான் லுமூட்,பேராக் (மலேசியா)
- முத்து மாரியம்மன் கோயில், வட டகோன் (மியம்மா)
- புஸ்ப மாரியம்மன் கோயில், டாவா கிராமம், (மியம்மா)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads