போன்சலே

From Wikipedia, the free encyclopedia

Remove ads

போன்சலே அல்லது போஸ்லே (Bhonsle, Bhonsale, Bhosale, Bhosle)[7] மரபு வழியாக போர்க் குணம் கொண்ட மராத்திய குலங்களில் ஒன்றாகும்.[8][9] மராத்திய குலத்தில் பிறந்த சிவாஜியின் தந்தை தக்காண சுல்தான்களிடம் படைத்தலைவராக பணிபுரிந்தவர். சதாரா நகரத்தை தலைநகராகக் கொண்டு, சத்திரபதி சிவாஜி, மராத்தியப் பேரரசை நிறுவினார்.

விரைவான உண்மைகள்

சத்திரபதி சிவாஜியின் வழித்தோன்றலான ஐந்தாவது மராத்தியப் பேரரசரும், முதலாம் சத்திரபதி சாகுஜி போன்ஸ்லேவின் (கிபி 1682–1749) காலத்திற்குப் பின்னர் போன்ஸ்லே குலத்தின் மராத்தியப் பேரரசின் ஆட்சியானது, மராத்திய பேஷ்வா வம்சத்தின் முதலமைச்சர்களின் கையில் சென்றது.

மராட்டியப் பேரரசு குலைந்த பின்னர் உருவான மராத்திய கூட்டமைப்பில் இருந்த குவாலியர் அரசு, இந்தூர் அரசு மற்றும் பரோடா அரசுகளை பேஷ்வா குலத்தலைவர்கள் ஆண்டனர்.

ஆனால் தஞ்சாவூர் மராத்திய அரசு, நாக்பூர் அரசு, அக்கல்கோட் அரசு மற்றும் கோல்ஹாப்பூர் அரசுகளை சத்ரபதி சிவாஜியின் போன்ஸ்லே குலத்தினர் தொடர்ந்து தனித்து ஆண்டு வந்தனர்.

Remove ads

போன்சலே வம்சத்தினர் ஆண்ட இராச்சியங்கள்

  1. சதாரா அரசு
  2. நாக்பூர் அரசு
  3. கோல்ஹாப்பூர் அரசு
  4. அக்கல்கோட் அரசு
  5. தஞ்சாவூர் மராத்திய அரசு

மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்

கி பி 1818-இல் மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம், பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் தலைமையிலான மராத்திய கூட்டமைப்பு படைகள் தோல்வி கண்டதால், மாராத்தியப் பேரரசு சிதறுண்டது.

ஆங்கிலேயர்கள் வகுத்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற போன்ஸ்லேக்கள் ஆண்ட நாக்பூர் அரசு, அக்கல்கோட் அரசு மற்றும் கோல்ஹாப்பூர் அரசுகள், ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில், பிரித்தானியர்களுக்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டிக் கொண்டு சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சிபுரிந்தனர்.

1858ல் கிழக்கிந்திய கம்பெனியை கலைத்த பிறகு, போன்சுலே குலத்தவர் ஆண்ட நாக்பூர் அரசு, கோல்ஹாப்பூர் அரசு மற்றும் அக்கல்கோட் அரசு ஆகியவைகள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. போன்சுலேக்கள் ஆண்ட இராச்சியங்கள் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. [10][11]

Remove ads

புகழ் பெற்ற போன்ஸ்லே வம்சத்தினர்

Thumb
மராத்தியப் பேரரசை நிறுவிய போன்ஸ்லே வம்சத்தில் பிறந்த பேரரசர் சிவாஜி
  • சத்திரபதி சம்பாஜி - (1657–1689), பேரரசர் சிவாஜியின் மகனும், மராத்தியப் பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார்.
  • சத்திரபதி இராஜாராம் (1670–1700), பேரரசர் சிவாஜியின் இளையதாரத்தின் மகனும், சத்திரபதி சம்பாஜிக்குப் பின்னர் பேரரசர் ஆனவர்.
  • தாராபாய் - (1675–1761),சத்திரபதி இராஜாராமின் பட்டத்து இராணியும், 1700ல் இராசாராம் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக இருந்தவர். தனது சிறுவயது மகன் இரண்டாம் சிவாஜியின் பெயரில் மராத்தியப் பேரரசை வழிநடத்தியவர்.
  • சாகுஜி (1708–1749) - சம்பாஜியின் மகனும் சிவாஜின் பேரனும் ஆவார். மராத்தியப் பேரரசின் வாரிசுரிமைப் போரில், இவர் தன் சிற்றன்னையான தாராபாய் மற்றும் அவரது சிறுவயது மகன் இரண்டாம் சிவாஜியை பதவியிலிருந்து விரட்டி விட்டு சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads