மார்வெலின் ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மார்வெலின் ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள் (ஆங்கிலம்: Marvel's ABC television series) என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றிய கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏபிசி என்ற தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமெரிக்க நாட்டு தொலைக்காட்சித் தொடர்களின் தொகுப்பாகும்.

விரைவான உண்மைகள் மார்வெலின் ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள், மூலம் ...

இந்த தொடர்கள் ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் மார்வெல் தொலைக்காட்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது, அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டு, உரிமையாளரின் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களின் தொடர்ச்சியை அங்கீகரிக்கின்றன. இந்த மார்வெல் ஏபிசி தொடர்களின் குழுவை "மார்வெல் ஹீரோஸ்" என்று அழைக்கப்படுகின்றது.

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் முதல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[1] [2] ஆகும். இந்த தொடர் 2012 ஆம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ்[3] திரைப்படதின் எழுத்தாளர் மற்றும் இயக்குனரான ஜோஸ் வேடன் என்பவரால் மார்வெல் தொலைக்காட்சி மற்றும் ஏபிசிக்காக உருவாக்கப்பட்டது. இந்த தொடரில் நடிகர் கிளார்க் கிரெக் என்பவர் பில் கோல்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இவரின் கதாபத்திரம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து தொடர்கிறது, இந்தத் தொடர் செப்டம்பர் 2013 இல் அறிமுகமாகி, ஆகஸ்ட் 2020 வரை ஏழு பருவங்களாக ஒளிபரப்பானது.[4] அதை தொடர்ந்து கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தில் தோன்றிய பெக்கி கார்ட்டர் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏஜென்ட் கார்ட்டர்[5] என்ற தொடர் உருவாக்கப்பட்டது. இந்த தொடர் இரண்டு பருவங்களாக சனவரி 2015 முதல் மார்ச்சு 2016 வரை ஒளிபரப்பானது. அத்துடன் ஏபிசியின் இறுதி தொடராக 2017 ஆம் ஆண்டில் இன்கியுமன்சு என்ற தொடர் ஒளிபரப்பானது.[6]

ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[7] என்ற தொடர் ஆரம்பத்தில் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல மதிப்பீட்டை பெற்று கொடுத்தது.[8] ஆனால் கடைசி மூன்று பருவங்களும் சுமாரான மதிப்பீடுகளை கொடுத்தது. அதை தொடர்ந்து இன்கியுமன்சு என்ற தொடரும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இதனால் டிசம்பர் 2019 இல் மார்வெல் நிறுவனம் ஏபிசி தொலைக்காட்சியுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொண்டது.

Remove ads

தொடர்கள்

மேலதிகத் தகவல்கள் தொடர்கள், பருவங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads