மால்வா, மத்தியப் பிரதேசம்

From Wikipedia, the free encyclopedia

மால்வா, மத்தியப் பிரதேசம்
Remove ads

மால்வா (Malwa) என்பது வட இந்தியாவின் மேல்-மத்தியில் அமைந்துள்ள ஓர் இயற்கையான பிரதேசம் ஆகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் எரிமலைச் செயற்பாடுகளினால் உருவான மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. நிலவியல் ரீதியில், மால்வா பீடபூமி என்பது விந்திய மலைத்தொடரின் வடக்கே உள்ள எரிமலைப் பிரதேசத்தைக் குறிக்கும். அரசியல் மற்றும் நிருவாக ரீதியாக, வரலாற்றுக் கால மால்வா பிரதேசம் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள், மற்றும் இராஜஸ்தானின் தென்-கிழக்குப் பகுதிகளையும் குறிக்கும். சில வேளைகளில் விந்தியப் பகுதியின் தெற்கே நிமார் பிரதேசத்தையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படுகிறது.

விரைவான உண்மைகள் மால்வா, நாடு ...

மால்வா பிரதேசம் தனியான அலகாகவே இருந்து வந்துள்ளது. இது அவந்தி நாடு, மவுரியர், குப்தர், பர்மாராக்கள், மல்வா சுல்தான்கள் முகலாயர், மராட்டியர் போன்ற பல்வேறு இராச்சியங்களாலும், வம்சங்களாலும் காலத்துக்குக் காலம் ஆளப்பட்டு வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் மால்வா ஏஜென்சி மத்திய இந்தியாவுடன் (மால்வா ஒன்றியம்) இணைக்கப்படும்வரை இது ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தது.[2]

இதன் அரசியல் எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டபோதும், இப்பகுதி இராசத்தான், மராத்தி, மற்றும் குஜராத்திய பண்பாடுகளின் கலப்புடன் தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும் வளர்த்துக் கொண்டது. இப்பிரதேசத்தில் காளிதாசர், வராகமிகிரர், பிரம்மகுப்தர், போஜர் போன்றவர்கள் தோன்றினர். பழங்காலத்தில் உஜ்ஜயினி நகரம் இதன் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக இந்தோர் இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. அபினி அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.

Remove ads

வரலாறு

கிழக்கு மால்வாப் பகுதியில் பல கற்கால பொருட்கள் அகழ்வாராயப்பட்டன.[3] மால்வா என்ற பெயர் பழங்குடியினரான மாளவர் என்பதிலிருந்து வந்தது. மாளவா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு கடவுளான இலட்சுமியின் இருப்பிடம் என்பது பொருள்.[4] இந்தப்பகுதியை 7 ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த சீனப் பயணி யுவான் சுவாங் தனது குறிப்பில் மோகோலோ எனக் குறிப்பிடுகிறார். அரேபிய ஆவணங்களில் மாலிபா என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.[5]

பொருளாதாரம்

இந்தூர் இந்தப்பகுதியின் வணிக நகரம் ஆகும்.இந்தபகுதி உலகின் மிக்கியமான ஓப்பியம் உற்பத்தி செய்யும் இடம். மால்வா பகுதி 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் வியாபாரத்தொடர்புகள் கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசின் கண்காணிப்பையும் மீறி ஓப்பியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றும் உலகின் சட்டபூர்வமற்ற ஓப்பியம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு காளி சிந்து ஆறு பாய்வதால், பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாகும். கோதுமை, சோயா, கடலை மற்றும் பருத்தி போன்றவை பரவலாகப் பயிரிடப்படுகிறது.

Remove ads

கலாச்சாரம்

இவர்கள் இயற்கையாகவே ராஜஸ்தானுடன் இணைந்திருந்ததால் இவர்களின் கலாச்சாரம் ராஜஸ்தானியர்களின் கலாச்சாரத் தாக்கம் கொண்டது. மராத்தியர்களின் கலாச்சாரத் தாக்கமும் சிறிது காணப்படும்.இவர்களின் மொழி மால்வி இந்தியும் பரவலாகப் பேசப்படுகிறது.உணவானது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகராஸ்டிரம் ஆகியவற்றின் தாக்கத்தால் ஆனது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads