இந்தோர் அரசு
மன்னாள் அரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோர் அரசு அல்லது ஹோல்கர் அரசு (Indore State or Holkar State),[1]பிரித்தானிய இந்தியாவுக்கு கட்டுப்பட்ட மராத்திய ஓல்கர் வம்சத்தவர்கள் கி பி 1818 முதல் இந்தூர் அரசை ஆண்ட |சமஸ்தானம் ஆகும். இதன் தலைநகரம் இந்தூர் நகரம் ஆகும்..


தற்கால மத்தியப் பிரதேசத்தில் அமைந்த இந்தூர் சமஸ்தானம், 1931-இல் மொத்தப் பரப்பளவு 24,605 சதுர கிலோ மீட்டரும், 3,368 கிராமங்களும்[2], 1,325,089 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்தூர் அரசின் முதல் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது. பின்னர் இந்தூருக்கு மாற்றப்பட்டது. பிற முக்கிய நகரங்கள் கார்கோன், பர்வாஹா மற்றும் பான்புரா ஆகும்.
இந்தூர் நகரம் மத்திய இந்தியாவின் முக்கிய வணிக மையமாகவும், படைகளின் பாசறையாகவும் விளங்கியது.
Remove ads
வரலாறு
ஓல்கர் வம்சத்தின் நிறுவனரும், மராத்தியப் படைத்தலைவரும் ஆன மல்ஹர் ராவ் ஓல்கருக்கு, மராத்தியப் பேரரசின் பேஷ்வா வழங்கிய இந்தூர் மற்றும் 28 சிறு நிலப்பரப்புகளைக் கொண்டு, 29 சூலை 1732-இல் இந்தூர் அரசை நிறுவினார். இவரது மருமகள் அகில்யாபாய் ஓல்கர் ஆவார். மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய ஓல்கர் தோல்வி கண்ட பின்னர், பிரித்தானிய இந்தியாவுடன் மராத்திய இந்தூர் அரசு 6 சனவரி 1818-இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, பிரித்தானிய இந்திய அரசின் பாதுக்காப்பிற்குட்பட்ட, சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தூர் அரசின் தலைநகர் மஹேஷ்வர் நகரத்திலிருந்து இந்தூர் நகரத்திற்கு 3 நவம்பர் 1818-இல் மாற்றப்பட்டது.
இந்திய விடுதலைக்கு பின்னர்
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தூர் அரசு சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், இந்தூர் அரசின் இறுதி மன்னர் யஷ்வந்த்ராவ் ஓல்கர் 1 சனவரி 1950-இல் கையொப்பமிட்டார்.
இந்தூர் அரசின் ஆட்சியாளர்கள்
பிரித்தானிய இந்தியாவின் அரச நிர்வாகம், இந்தூர் மன்னர்களுக்கு 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.[3]
Remove ads
இதனையும் காண்க
படக்காட்சிகள்
- மஹேஷ்வர் கோட்டை
- மஹேஷ்வர் கோட்டை
- நர்மதை ஆற்றின் கரையில் அகல்யாபாய் படித்துறை, மஹேஷ்வர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

