மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
இலங்கையில் உள்ள முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் கோவில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமய திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.
இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிட்டை செய்யப்பட்டு கி.பி. 1795 ஆனி உத்திர நட்சத்திரத்தில் குடமுழுக்கு சிறப்புற இடம்பெற்றது.
Remove ads
அமைவிடம்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
வரலாறு
தொன்மை வரலாற்றின்படி, மாவிட்டபுரத்தில் 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோவில் இருந்துள்ளது.[1] வேறொரு வரலாற்றின்படி, 8-ஆம் நூற்றாண்டு சோழ[2] மன்னர் திசை உக்கிர சோழனின் மகள் இளவரசி மாருதப்புரவீகவல்லியின் முகம் குடல் கோளாறு மற்றும் முக சிதைவு ஆகியவற்றால் குதிரையைப் போலத் தோற்றமளித்தது.[3][4][5] கீரிமலை நன்னீர் நீரூற்றில் குளிக்க ஒரு பூசாரி அவளுக்கு அறிவுறுத்தினார்.[3][4] அவளும் வசந்த காலத்தில் அங்கு வந்து குளித்த பிறகு அவளது நோயும் முகச்சிதைவும் மறைந்தது.[3][4] நன்றியுடன் அவள் கீரிமலையில் இருந்து தென்கிழக்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் கடவையில் அமைந்துள்ள முருகன் ஒரு முழுக் கோவிலாகப் புதுப்பித்தாள்.[3][4][5] மதுரை மன்னரும் சிற்பிகள், கலைஞர்கள், கட்டுமானப் பொருட்கள், கிரானைட்டு, சிலைகள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கோவிலைப் புதுப்பிக்க உதவினார்.[3] முருகனின் (காங்கேசன்) சிலை காயத்துறைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்துறை பின்னர் காங்கேசன்துறை எனப் பெயர் பெற்றது.[6][7]
மாவிட்டபுரம் என்ற பெயர் மா (குதிரை), விட்ட (விலகிய), புரம் (புனித நகர்) என்ற பொருளில் பெயர்பெற்றது..[3] காலப்போக்கில் இக்கோவில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுள்ளது.[1] இன்றைய கோவில் 17-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.[8]
Remove ads
ஆலயப்பிரவேசம்
அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் "உயர்குடி" இந்துக்களே கோவில்களில் வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவ்வாறே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலும் தாழ்ந்த சாதி இந்துக்கள்ஙனுமதிக்கப்படவில்லை.[9] 1950கள், 60களில் ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்றன. 1956 சூலை 9 இல் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணைச் சிவன் கோவில், பெருமாள் கோவில் போன்ற பல புகழ்பெற்ற கோவில்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன. 1968 ஆம் ஆண்டில் பல நூற்றுக்கணக்கான தாழ்ந்த சாதி இந்துக்கள் (குறிப்பாக பள்ளர், நளவர் போன்றவர்கள்) மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்போராட்டத்தை வெள்ளாளர் எனப்படும் உயர்சாதி இந்துகள் செ. சுந்தரலிங்கம் தலைமையில் வன்முறைகள் மூலம் எதிர்கொண்டனர்.[10] 1968 சூன் மாதத்தில் தாழ்த்தப்பட்டோர் தடையை மீறிக் கோவிலின் உள்ளே நுழைந்தனர்.[11] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலையீட்டை அடுத்து அவர்களுக்கு கோவிலின் உள்ளே செல்வதற்கு அனுமதியை கோவில் நிருவாகத்தினர் வழங்கினர்.[12] 'உயர்குடிகளின்' எதிர்ப்புக்குத் தலைமை வகித்த செ சுந்தரலிங்கத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கை மீயுயர் நீதிமன்றம் அவரை "சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்புச் சட்டத்தின்" கீழ் குற்றவாளியாக அறிவித்து ரூ. 50 தண்டம் அறிவித்தது.[13] இந்தச் சட்டம் 1957 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.[12][13]
ஈழப்போர்
1990களின் ஆரம்பத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதி (கோவில் உட்பட) உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.[14][15] The temple was inside the HSZ and as a result its priests were evicted by the military.[8][16] கோவில் இராணுவத்தினரின் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்கானது. கோவில் உடமைகளும் சூறையாடப்பட்டன.[8] ஈழப் போர் முடிவில் இராணுவத்தினர் கட்டுப்பாடுகளை சிறிதளவு தளர்த்தியதை அடுத்து, கோவில் பூசாரிகளும், பக்தர்களும் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.[8] கோவிலின் 108 அடி உயரக் கோபுரம் மீளக் கட்டப்பட்டது, ஆனாலும் 1795 முதல் இருந்த கோவிலின் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்திருந்தனன.[8]
2011 திசம்பரில் இக்கோவில் தொல்லியல் பாதுகாப்புச் சின்னமாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டது.[17]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads