மா. மதிவேந்தன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மா. மதிவேந்தன் (பிறப்பு: 25 திசம்பர் 1984) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் மருத்துவர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், மே 2021 முதல் இராசிபுரம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகவும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

விரைவான உண்மைகள் மா.மதிவேந்தன், தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ...
Remove ads

கல்வி

இவர் 2002-இல் இராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் மற்றும் எம்.டி. பயின்றார்.[1]

தனி வாழ்க்கை

தற்போது இவர் இராசிபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.[2] இவரது தந்தை அருந்ததிய சமூகத்தை சேர்ந்த மருத்துவர் மாயவன். இவர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியிலும் ராசிபுரம் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுகவில் இருந்த இவர் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்ட போது அவருடன் வெளியேறி மதிமுகவில் சேர்ந்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவுக்கே வந்தார். நாமக்கல்லில் சாந்தி மருத்துவமனையை நடத்தி வருகிறார். தற்போது மதிவேந்தன் அம்மருத்துவமனையின் பொறுப்பை எடுத்து நடத்தி வருகிறார்.[3]

Remove ads

அரசியல்

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுயில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று சுற்றுலா துறை அமைச்சசராக பதவியேற்றார்.[4] உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பொழுது பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன அதில் மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது, இவரிடமிருந்த சுற்றுலாதுறை முன்பு வனத்துறையை பார்த்த அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads