மு. க. ஸ்டாலின் அமைச்சரவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மு. க. ஸ்டாலின் அமைச்சரவை (M. K. Stalin ministry)[1] என்பது 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு அமைக்கப்பட்டது ஆகும். இந்த அமைச்சரவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7 மே 2021 அன்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சராக இடம்பெற்றிருந்த 15 பேர் அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்தின் 21வது முதல்வராக, 8வது நபராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றார்.[2]

விரைவான உண்மைகள் உருவான நாள், மக்களும் அமைப்புகளும் ...

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 14, டிசம்பர் 2022 அன்று அமைச்சராகப் பதவியேற்றார். அத்துடன் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.[3]

Remove ads

அமைச்சரவை

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பெயர் ...
Remove ads

அமைச்சரவை மாற்றம்

29 மார்ச் 2022

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், அமைச்சர் பெயர் ...
Remove ads

பணிகள்

சூன் 2021-ல், முதல்வர் ஸ்டாலின், முந்தைய அரசாங்கம் தாக்கல் செய்த வழக்குகளை சட்ட அமைச்சகம் மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், மீத்தேன் எடுப்பு, நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை - சேலம் விரைவுச் சாலைத் திட்டம் ஆகிய 3 விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பத்திரிகைகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு திரும்பப்பெற்றது.[4][5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads