மிஸ்பா-உல்-ஹக்

முன்னாள் பாகிஸ்தானிய துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

மிஸ்பா-உல்-ஹக்
Remove ads

மிஸ்பா-உல்-ஹக்: (Misbah-ul-Haq,مصباح الحق خان نیازی, பிறப்பு: மே 28, 1974), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர்[1]. மற்றும் தலைவர் ஆவார். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, பஞ்சாப் துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துடுப்பாட்ட அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1] இவரின் தலைமையில் பாக்கித்தான் அணி 2012 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.இதன்மூலம் கோப்பை வென்ற இரண்டாவது பாக்கித்தான் னித் தலைவர் எனும் சாதனை படைத்தார்.[2]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

சர்வதேச போட்டிகள்

தேர்வுத் துடுப்பாட்டம்

2001 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாதில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . மார்ச் 1 இல் ஓக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இதன் முதல் ஆட்டப்பகுதியில் 88 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 25 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டி

2017 ஆம் ஆண்டில் பாக்கித்தன் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மே 10, ரூசோவில் நடைபெற்ற 3 ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[1] இதன் முதல் ஆட்டப்பகுதியில் 148 பந்துகளில் 59 ஓட்டங்களை எடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 14 பந்துகளில் 2 பஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

2002 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. ஏபரல் 27 லாகூரில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர்.[1] இந்தப் போட்டியில் இவர் 37 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டி

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இவர் இறுதியாக விளையாடினார்.[1] இந்தப் போட்டியில் 59 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 34* ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பன்னாட்டு இருபது20

2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2007 ஐசிசி உலக இருபது20 தொடரில் செப்டம்பர் 2 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 5 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தார். 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டி

2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 27 , அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் இறுதியாக விளையடினார்.[1] 32 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்ட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Remove ads

துடுப்பாட்ட சாதனை

  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை(56 பந்துகளில் சதம்[3]) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.[4] இச்சாதனை பின்னர் பிரண்டன் மெக்கல்லம் முறியடித்தார் (54 பந்துகளில் சதம்).
  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்).இவரின் தலைமையில் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் வென்றுள்ளது.இதன்மூலம் அதிக போட்டிகளில் வென்ற பாக்கித்தான் தலைவர் எனும் சாதனை படைத்தார்.[5]
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads