2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
Remove ads

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2015 Cricket World Cup) 11-ஆவது துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். இதனை ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்தின. போட்டிகள் 2015 பெப்ரவரி 14 தொடக்கம் மார்ச் 29 வரை நடைபெற்றன. மொத்தம் 14 நாடுகள் பங்குபற்றிய 44 போட்டிகள் 14 அரங்குகளில் இடம்பெற்றன. ஆத்திரேலியா 26 போட்டிகளை அடிலெயிட், பிரிஸ்பேன், கான்பரா, ஹோபார்ட், மெல்பேர்ண், பேர்த், சிட்னி ஆகிய நகரங்களிலும், நியூசிலாந்து 23 போட்டிகளை ஆக்லன்ட், கிறைஸ்ட்சேர்ச், துனெடின், ஆமில்ட்டன், நேப்பியர், நெல்சன், வெலிங்டன் ஆகிய நகரங்களிலும் நடத்தின.[2]

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...

இப்போட்டிகளை ஏற்றுநடத்தும் உரிமை 2011 உலகக்கிண்ணம் மற்றும் 2019 உலகக்கிண்ணங்களை ஏலம் விடும்போது தீர்மானிக்கப்பட்டது. 2011 உலகக்கிண்ணம் நடத்த நான்கு ஆசிய தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளான இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் இணைந்து பத்துக்கு மூன்று என்ற வாக்குகளில் தேர்வானது (ஆயினும் பின்னர் பாக்கித்தான் ஏற்று நடத்தும் உரிமையை இழந்தது). டாசுமானிய நாடுகளின் முயற்சியால் கவரப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை ஆத்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் வழங்கியது.[3][4] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இரண்டாம் முறையாக, 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு, இணைந்து நடத்துகின்றன. சச்சின் டெண்டுல்கர் இச்சுற்றுத்தொடரின் தூதுவராக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நியமிக்கப்பட்டார்.[5]

2011 இல் இந்திய உபகண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை 6 இழப்புகளால் வெற்றி கொண்ட இந்திய அணி இம்முறை நடப்பு வாகையாளராக போட்டியிட்டது. பிரிவு ஆ-வைச் சேர்ந்த அணிகளான இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான 15 பெப்ரவரி 2015 நடைபெற்ற போட்டியின் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் 12 நிமிடங்களுக்குள்ளேயே விற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.[6]

மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆத்திரேலிய அணிகள் மோதின. 93,013 பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்வாட்டத்தில்[7] ஆத்திரேலியா 7 இழப்பகளால் நியூசிலாந்தை வென்று ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

Remove ads

போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு

போட்டித்தொடர் வகை

2011 ஆண்டின் உலகக்கிண்ணத்தைப் போல இந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.[8] ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். இறுக்கமாக வரும் ஆட்டங்களுக்கு சிறப்பு நிறைவு முறையைப் பயன்படுத்துவது என்று 29 சனவரி 2015 அன்று முடிவெடுக்கப்பட்டது.[9] லீக் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் வெளியேறும் வரை குறைந்தது ஆறு ஆட்டங்கள் விளையாடும்.

Remove ads

தகுதி

Thumb
குறித்துக்காட்டியுள்ள நாடுகள் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் பங்குபெறும்.
  பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழு அங்கம் வகிப்பவை
  உதுகூ அல்லது தகுநிலைப் போட்டிகள் மூலமாக தகுதியுற்றோர்
  தகுதித்தேர்வில் பங்குபற்றித் தோற்றுப்போனவை

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழு அங்கம் வகிக்கும் பத்து நாடுகள் அனைத்தும் நேரடியாக உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும்.

தகுதி பெற்ற அணிகள்

மேலதிகத் தகவல்கள் அணிகள், முறை ...
  1. முழு உறுப்பினர்களின் தரவரிசை: திசம்பர் 31, 2012ஆம் ஆண்டு பதுஅ ஒ.ப.து வெற்றியாளர் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டது.

தயார்ப்படுத்தல்

உள்ளூர் ஏற்பாடுக் குழு

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் தயார்ப்படுத்தலில் இறுதி வடிவம் தரப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு பின்வருமாறு; தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோன் ஹார்டன் (John Harnden) தெரிவு செய்யப்பட்டார்.[11] ஜேம்ஸ் ஸ்ரோங் (James Strong) கூட்டத் தலைவராகவும்[12], ரல்ப் வாட்டேர்ஸ் (Ralph Waters) பிரதிக் கூட்டத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.[13]

நிகழிடங்கள்

மேலதிகத் தகவல்கள் சிட்னி, மெல்பேர்ண் ...

மூலம்:[14]

Remove ads

நடுவர்கள்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர்களைத் தெரிவு செய்யும் குழு, இவ்வுலகக்கிண்ணப் போட்டிகளில் கடமையாற்றுவதற்குப் பின்வரும் 20 நடுவர்களைத் தெரிவுசெய்துள்ளது.

ஆத்திரேலியா
தென்னாபிரிக்கா
இங்கிலாந்து
நியூசிலாந்து
இந்தியா
  • இந்தியா சு. இரவி
பாகிஸ்தான்
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்
  • மேற்கிந்தியத் தீவுகள் ஜோல் வில்சன்
Remove ads

பரிசுத்தொகை

இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 10 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இது கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை விட 20% அதிகமாகும். இப்பரிசுத்தொகையானது அணிகளின் பெறுபேற்றிற்கமைய பின்வரும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும்[15]:

மேலதிகத் தகவல்கள் நிலை, பரிசுத்தொகை (US$) ...

இவ்வகையில், ஓர் அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுமாயின் மொத்தப் பரிசுத்தொகையாக 4,245,000 டொலர்களையும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியுற்று குழு நிலையுடன் வெளியேறுமாயின் 35,000 அமெரிக்க டொலர்களையும் பரிசாகப் பெறும்.

Remove ads

குறியீடுகள்

நற்பேறு சின்னம்

அதிகாரபூர்வ பாடல்

ஊடகங்கள்

  • விஜய் தொலைக்காட்சி தமிழ் வர்ணனையுடன் நேரலையாக ஒளிபரப்பியது. ஸ்டார் தொலைக்காட்சி அமைப்பின் ஓர் அங்கமாக விஜய் தொலைக்காட்சி இருப்பதால், அதே காட்சிகள் இடம்பெற்றன; விளையாட்டரங்கத்தில் எழும் ஒலிகளுடன், தமிழ் வர்ணனை ஒருங்கிணைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

அணிகளின் வீரர்கள்

இச்சுற்றுத்தொடருக்காக 15 பேர் கொண்ட அணி ஒன்றை ஒவ்வொரு நாடுகளும் பட்டியலிட்டு சனவரி 07 2015 க்கு முன் தருமாறு கோரப்பட்டது.[16] அதன் படி, கீழே ஒவ்வொரு நாட்டு அணி வீரர்களின் பட்டியல்தரப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் ஆப்கானித்தான், ஆத்திரேலியா ...

1பெப்ரவரி 7 அன்று, பயிற்சியின் போது தம்மிக பிரசாத் காயமடைந்ததை அடுத்து,[19] அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீரா இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[20]
2 பெப்ரவரி 25 இல், ஜீவன் மென்டிஸ் காயமடைந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக உபுல் தரங்க இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[21]

மேலதிகத் தகவல்கள் இந்தியா, அயர்லாந்து ...
Remove ads

பயிற்சி ஆட்டங்கள்

பதினான்கு, பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் அல்லாதவை 08 பெப்ரவரி தொடக்கம் 13 பெப்ரவரி வரை நிகழ்த்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.[22]

பயிற்சி ஆட்டங்கள்
8 பெப்ரவரி 2015
14:00 (ப/இ)
(ஓட்டப்பலகை)
ஆத்திரேலியா 
371 (48.2 நிறைவுகள்)
 இந்தியா
265 (45.1 நிறைவுகள்)
அஜின்கியா ரகானே 66 (52)
பாட் கம்மின்சு 3/30 (6 நிறைவுகள்)
106 ஓட்டங்களால் ஆத்திரேலியா வென்றது.
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: கிரிஸ் கபெனி (நியூ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.

9 பெப்ரவரி 2015
11:00
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
7/279 (44.4 நிறைவுகள்)
 இலங்கை
5/188 (24.3 நிறைவுகள்)
திலகரத்ன டில்சான் 100 (83)
கைய்ல் அப்போட் 3/37 (6.4 நிறைவுகள்)
South Africa won by 5 wickets (D/L)
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), எஸ். ரவி (இந்)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இலங்கை)
  • நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • மழையினால் தென்னாபிரிக்காவிற்கு இலக்கு 188 ஆகவும் நிறைவுகள் 25 ஆகவும் குறைக்கப்பட்டது.

9 பெப்ரவரி 2015
11:00
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
7/157 (30.1 நிறைவுகள்)
முடிவு இல்லை
பேர்ட் சட்ச்லிஃப்ஃபே ஓவல், லிங்கோலின்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), ருசிர பள்ளியகுருகே (இல)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.

9 பெப்ரவரி 2015
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
122 (29.3 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
1/125 (22.5 நிறைவுகள்)
லென்டி சிம்மன்ஸ் 45 (55)
கிரிஸ் வோகஸ் 5/19 (7.3 நிறைவுகள்)
மொயீன் அலி 46 (43)
கேமர் ரோச் 1/31 (5 நிறைவுகள்)
09 இழப்புகளால் வெற்றிபெற்றது.
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி umpires = அலீம் தர் (பாக்), பவுல் ரெயிஃப்ஃபெல் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிரிஸ் வோகஸ் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.

9 பெப்ரவரி 2015
14:30 (ப/இ)
(ஓட்டப்பலகை)
பாக்கித்தான் 
246 (49.5 நிறைவுகள்)
 வங்காளதேசம்
7/247 (48.1 நிறைவுகள்)
பாக்கித்தான் 3 இழப்புகளால் வெற்றி
பிளக்டவுன் ஒலிம்பிக் பார்க், சிட்னி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஜோவெல் வில்சன் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் துடுப்பாடியது.

10 பெப்ரவரி 2015
14:30 (ப/இ)
(ஓட்டப்பலகை)
இசுக்காட்லாந்து 
296/6 (50 நிறைவுகள்)
 அயர்லாந்து
117 (27 நிறைவுகள்)
மாட் மாச்சன் 103 (108)
மாக்சு சொரென்சென் 3/55 (10 நிறைவுகள்)
பவுல் ஸ்டேர்லிங் 37 (44)
அலசுடயர் எனான்சு 4/17 (5 நிறைவுகள்)
ஸ்கொட்லாந்து 179 ஓட்டங்களால் வெற்றி
பிளாக்டவுன் ஒலிம்பிக் பூங்கா, சிட்னி
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஜொயெல் வில்சன் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடியது.

10 பெப்ரவரி 2015
14:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
364/5 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
211/8 (50 நிறைவுகள்)
ரோகித் சர்மா 150 (122)
ஹமீட் ஹசன் 1/49 (8 நிறைவுகள்)
இந்தியா 153 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), சைமன் ஃபிரை (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.

11 பெப்ரவரி 2015
11:00
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
331/8 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
197 (44.2 நிறைவுகள்)
நியூசிலாந்து 134 ஓட்டங்களால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), ரொட் டக்கர் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.

11 பெப்ரவரி 2015
11:00
ஓட்டப்பலகை
இலங்கை 
279/8 (50 நிறைவுகள்)
 சிம்பாப்வே
281/3 (45.2 நிறைவுகள்)
சிம்பாப்வே 7 இழப்புகளால் வெற்றி
பெர்ட் சட்கிளிஃப் ஓவல், லிங்கன், நியூசிலாந்து
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

11 பெப்ரவரி 2015
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
304/8 (50 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
116 (30.1 நிறைவுகள்)
மைக்கல் கிளார்க் 64 (61)
கிருஷ்ணா சந்திரன் 3/50 (9 நிறைவுகள்)
சுவப்னில் பட்டீல் 31 (45)
சேவியர் டொஹர்ட்டி 2/3 (1.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 188 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.

11 பெப்ரவரி 2015
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
250/8 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
252/6 (48.5 நிறைவுகள்)
ஜோ ரூட் 85 (89)
யாசிர் சா 3/45 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 4 இழப்புகளால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.

12 பெப்ரவரி 2015
09:30
ஓட்டப்பலகை
 இசுக்காட்லாந்து
310/9 (50 நிறைவுகள்)
தினேசு ராம்தின் 88 (86)
அலசுடயர் எவான்சு 3/63 (10 நிறைவுகள்)
கைல் கோட்சர் 96 (106)
ஆன்ட்ரே ரசல் 2/32 (8 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 3 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: ஜொகான் குளோட்டி (தெஆ), பவுல் ரைஃபெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.

12 பெப்ரவரி 2015
10:00
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
189 (48.2 நிறைவுகள்)
 அயர்லாந்து
190/6 (46.5 நிறைவுகள்)
சௌம்யா சார்க்கர் 45 (51)
மாக்சு சொரென்சென் 3/31 (9.2 நிறைவுகள்)
ஆன்ட்ரூ பால்பர்னி 63* (79)
தைசுல் இசுலாம் 2/29 (8 நிறைவுகள்)
அயர்லாந்து 4 இழப்புகளால் வெற்றி
பிளாக்டவுன் ஒலிம்பிக் பூங்கா, சிட்னி
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), குமார் தர்மசேன (இல)
  • நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.

13 பெப்ரவரி 2015
10:00
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
308/9 (50 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
294 (48.2 நிறைவுகள்)
ஷமீயுல்லாஹ் சின்வாரி 58 (80)
அம்ஜத் ஜாவெத் 4/39 (10 நிறைவுகள்)
குராம் கான் 86 (105)
அப்தாப் ஆலம் 3/43 (6.2 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 14 ஓட்டங்களால் வெற்றி
ஜங்சன் ஓவல், மெல்பேர்ண்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), மைக்கேல் கஃப் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானித்தான் அணி முதலில் களத்தடுப்பாடியது.
Remove ads

போட்டிகள்

42 பிரிவு ஆட்டங்கள் ஆடப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் வகிக்கும் நான்கு அணிகளும் காலிறுதிக்குத் தெரிவாகும்.

சுற்று ஆட்டம்

ஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடிய புள்ளிகள் பெற்ற நான்கு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளன).

மேலதிகத் தகவல்கள் பிரிவு அட்டவணைகளில் வண்ணங்களுக்கான விளக்கம் ...

பிரிவு அ

மேலதிகத் தகவல்கள் அணி, வி ...
14 பெப்ரவரி
11:00
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
331/6 (50 நிறைவுகள்)
 இலங்கை
233 (46.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 98 ஓட்டங்களால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: கோரி ஆன்டர்சன் (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.

14 பெப்ரவரி
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
342/9 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
231 (41.5 நிறைவுகள்)
ஆரன் பிஞ்ச் 135 (128)
ஸ்டீவன் ஃபின் 5/71 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 112 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • ஸ்டீவன் ஃபின் அடுத்தடுத்த மூன்று பந்து-வீச்சுகளில் பிராட் ஹாடின், கிளென் மாக்சுவெல், மிட்செல் ஜோன்சன் ஆகியோரை வீழ்த்தினார்.[23]
  • ஜேம்ஸ் டெய்லர் lbw மூலம் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டு மூன்றாம் நடுவர் டெய்லர் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னர், உடனேயே ஜேம்ஸ் அண்டர்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக இலங்கை நடுவரால் அறிவிக்கப்பட்டு ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை நடுவரின் இத்தீர்ப்பை ஐசிசி பின்னர் மீளாய்வு செய்ததில், ஆன்டர்சனின் ஆட்ட இழப்புக்குக் காரணமான பந்து ஓர் "இறந்த பந்து" என அறிவித்திருக்க வேண்டும் எனவும், இதனால் ஆன்டர்சன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது தவறான முடிவு என்றும் கூறியுள்ளது.[24]

17 பெப்ரவரி
11:00
ஓட்டப்பலகை
 இசுக்காட்லாந்து
142 (36.2 நிறைவுகள்)
நியூசிலாந்து 
146/7 (24.5 நிறைவுகள்)
மாட் மாச்சன் 56 (79)
டேனியல் வெட்டோரி 3/24 (8.2 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 38 (45)
ஜான் டேவி 3/40 (7 நிறைவுகள்)
நியூசிலாந்து 3 இழப்புகளால் வெற்றி
பல்கலைக்கழக ஓவல், துனெடின்
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (நியூசி)
  • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இசுக்காட்லாந்தின் நான்கு வீரர்கள் தாம் சந்தித்த முதலாவது பந்திலேயே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உலகக் கிண்னப் போட்டியில் இது முதலாவது தடவையாகும்.[25] இசுக்காட்லாந்தின் ஐந்து வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இசுக்காட்லாந்தின் வரலாற்றில் முதல் முறையாகும்.[26]

18 பெப்ரவரி
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
162 (42.5 நிறைவுகள்)
 வங்காளதேசம்
267 (50 நிறைவுகள்)
வங்காளதேசம் 105 ஓட்டங்களால் வெற்றி
மனுக்கா ஓவல், கான்பரா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம்
  • நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

20 பெப்ரவரி
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
123 (33.2 நிறைவுகள்)
 நியூசிலாந்து
125/2 (12.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 46 (70)
டிம் சௌத்தி 7/33 (9 நிறைவுகள்)
நியூசிலாந்து 8 இழப்புகளால் வெற்றி
வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம், வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: டிம் சௌத்தி (நியூ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பந்துவீச்சில் டிம் சௌத்தி (நியூ) உலகக்கிண்ண வரலாற்றில் மூன்றாவதாகவும், நியூசிலாந்தின் ஒருநாள் பன்னாட்டுப் போட்டி வரலாற்றில் முதலாவதாகவும் உள்ளார்.[27]
  • பிரண்டன் மெக்கல்லம் (நியூ) உலகக்கிண்ண வரலாற்றில் அதிவிரைவான ஐம்பது ஓட்டங்களைப் (18 பந்துகள்) பெற்றார். இது ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் மூன்றாவதும், நியூசிலாந்தின் அதிவிரைவான 50 ஓட்டங்களும் ஆகும்.[27]

21 பெப்ரவரி
13:30 (ஒசநே+10:00) (ப/இ)
ஓட்டப்பலகை
  • மழை காரணமாக பந்து எதுவும் வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
  • ஆத்திரேலியா, வங்காளதேசம் இரண்டும் ஒரு புள்ளியைப் பெற்றன.[28]

22 பெப்ரவரி
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
232 (49.4 நிறைவுகள்)
 இலங்கை
236/6 (48.2 நிறைவுகள்)
மகேல ஜயவர்தன 100 (120)
ஹமீட் ஹசன் 3/45 (9 நிறைவுகள்)
இலங்கை 4 இழப்புகளால் வெற்றி.
பல்கலைக்கழக ஓவல், துனெடின்
நடுவர்கள்: கிறிசு கஃபனி (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இலங்கையின் இரண்டு ஆரம்ப ஆட்டக்காரர்களும் (திரிமான்ன, தில்சான்) தாம் சந்தித்த முதலாவது பந்திலேயே ஓட்டங்கள் எதுவு எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.[29]
  • ஹமீட் ஹசன் 50 ஒருநாள் மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது ஆப்கானிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.[29]

23 பெப்ரவரி
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
303/8 (50 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
184 (42.2 நிறைவுகள்)
மொயீன் அலி 128 (107)
ஜோசு டேவி 4/68 (10 நிறைவுகள்)
கைல் கோட்சர் 71 (84)
ஸ்டீவன் ஃபின் 3/26 (9 நிறைவுகள்)
இங்கிலாந்து 119 ஓட்டங்களால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: எஸ். இரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து முதலில் களத்தடுப்பாடியது.

26 பெப்ரவரி
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
211/9 (49.3 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
210 (50 நிறைவுகள்)
ஷமீயுல்லாஹ் சின்வாரி 96 (147)
ரிச்சி பெரிங்டன் 4/40 (10 நிறைவுகள்)
மாட் மாச்சன் 31 (28)
ஷபூர் சத்ரான் 4/36 (10 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 1 இழப்பால் வெற்றி
பல்கலைக்கழக ஓவல், துனெடின்
நடுவர்கள்: சைமன் பிரை (லஆசி) ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: ஷமீயுல்லாஹ் சின்வாரி
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடியது.

26 பெப்ரவரி
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இலங்கை
332/1 (50 நிறைவுகள்)
வங்காளதேசம் 
240 (50 நிறைவுகள்)
தில்சான் 161* (146), சங்கக்கார 105* (76)
ரூபெல் ஒசைன் 1/62 (9 நிறைவுகள்)
சபீர் ரகுமான் 53 (62)
லசித் மாலிங்க 3/35 (9 நிறைவுகள்)
இலங்கை 92 ஓட்டங்களால் வெற்றி
மெல்பேர்ண் அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பவுல் ரைஃபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
  • திலகரத்ன டில்சான், குமார் சங்கக்கார இருவரும் இணைந்து எடுத்த 210* ஓட்டங்கள் ஒருநாள் போட்டியில் இலங்கையின் இரண்டாவது விக்கெட்டுக்கான அதியுயர் ஓட்டங்களாகும்.[30]
  • தில்சானின் 161* ஓட்டங்கள் "ஆறு" ஓட்டங்கள் எதுவும் அடிக்காமல் ஒரு வீரர் எடுத்த அதியுயர் ஒருநாள் சாதனை ஆகும்.[31]

28 பெப்ரவரி
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
151 (32.2 நிறைவுகள்)
 நியூசிலாந்து
152/9 (23.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 1 இழப்பால் வெற்றி
ஈடன் பூங்கா, ஆக்லன்ட்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), மராயிஸ் எராஸ்மஸ் (தெ)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
  • உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் ஆத்திரேலியா எடுத்த மிகக்குறைந்த ஓட்டங்கள் (151) இதுவாகும்.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து நியூசிலாந்து அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது..

1 மார்ச்
11:00 (ஒசநே++13:00)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
309/6 (50 நிறைவுகள்)
 இலங்கை
312/1 (47.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 121 (108)
திலகரத்ன டில்சான் 1/35 (8.2 நிறைவுகள்)
திரிமான்ன 139* (141), சங்கக்கார 117* (86)
மொயீன் அலி 1/50 (10 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.
  • உலகக்கோப்பை ஒன்றில் சதம் அடித்த மிக இளவயது இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜோ ரூட்.[32]

4 மார்ச்
14:30 (ஒசநே+08:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
417/6 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
142 (37.3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 275 ஓட்டங்களால் வெற்றி
மேற்கு ஆத்திரேலிய அரங்கு, பேர்த்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மைக்கேல் கஃப் (இங்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடியது.
  • உலகக்கோப்பை வரலாற்றில் ஆத்திரேலியாவின் 417/6 ஓட்டங்கள் அதிகூடியதாகும்.[33]
  • ஆத்திரேலியாவின் 275 ஓட்ட வெற்றி உலகக்கோப்பை வரலாற்றில் அதிகூடியதாகும்.[34]

5 மார்ச்
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
 இசுக்காட்லாந்து
318/8 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
322/4 (48.1 நிறைவுகள்)
கைல் கோட்சர் 156 (134)
தஸ்கின் அகமது 3/43 (7 நிறைவுகள்)
தமீம் இக்பால் 95 (100)
ஜோசு டேவி 2/68 (10 நிறைவுகள்)
வங்காளதேசம் 6 இழப்புகளால் வெற்றி
சாக்சுட்டன் ஓவல் அரங்கம், நெல்சன்
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: கைல் கோட்சர் (ஸ்கொ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடியது.
  • இப்போட்டியின் முடிவுகளை அடுத்து இசுக்கொட்லாந்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.

8 மார்ச்
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
186 (47.4 நிறைவுகள்)
 நியூசிலாந்து
188 (36.1 நிறைவுகள்)
நஜிபுல்லா சத்ரான் 56 (56)
டேனியல் வெட்டோரி 4/18 (10 நிறைவுகள்)
மார்ட்டின் கப்தில் 57 (76)
முகம்மது நாபி 1/39 (7.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 6 இழப்புகளால் வெற்றி
மக்ளீன் பூங்கா, நேப்பியர்
நடுவர்கள்: யொகான் குளொயிட் (தென்), மராயிஸ் எராஸ்மஸ் (தென்)
ஆட்ட நாயகன்: டேனியல் வெட்டோரி (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடியது.
  • இப்போட்டியின் முடிவுகளை அடுத்து ஆப்கானித்தான் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.

8 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
376/9 (50 நிறைவுகள்)
 இலங்கை
312 (46.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 64 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
  • குமார் சங்கக்கார அடுத்தடுத்த மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளில் நூறுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார். சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,000 ஓட்டங்களைக் கடந்தார்.

9 மார்ச்
14:00 (ஒசநே+10:30) (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
275/7 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
260 (48.3 நிறைவுகள்)
யொசு பட்லர் 65 (52)
ரூபெல் ஒசைன் 4/53 (9.3 நிறைவுகள்)
வங்காளதேசம் 15 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: மகுமுதுல்லா ரியாத் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
  • இப்போட்டியின் முடிவுகளை அடுத்து இங்கிலாந்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
  • இப்போட்டியின் முடிவுகளை அடுத்து வங்காளதேசமும், இலங்கையும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

11 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
363/9 (50 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
215 (43.1 நிறைவுகள்)
பிரெடி கோல்மேன் 70 (74)
நுவான் குலசேகர 3/20 (7 நிறைவுகள்)
இலங்கை 148 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ஜொயெல் வில்சன் (மேற்)
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
  • குமார் சங்கக்கார 4வது அடுத்தடுத்த ஒருநாள் சதத்தை அடித்தார்.
  • அஞ்செலோ மத்தியூஸ் இலங்கையின் அதிவேகமான உலகக்கோப்பை ஐம்பதை அடித்தார்.

13 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
288/7 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
290/7 (48.5 நிறைவுகள்)
நியூசிலாந்து 3 இழப்புகளால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்தில் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
  • மகுமுதுல்லா ரியாத் உலகக்கிண்ணப் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு நூறுகள் அடித்த முதலாவது வங்காளதேச வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

13 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
111/7 (36.2 நிறைவுகள்)
 இங்கிலாந்து
101/1 (18.1 நிறைவுகள்)
சபீகுல்லா 30 (64)
கிரிஸ் ஜோர்டான் 2/13 (6.2 நிறைவுகள்)
இயன் பெல் 52* (56)
அமீத் அசன் 1/17 (5 நிறைவுகள்)
இங்கிலாந்து 9 இழப்புகளால் வெற்றி (ட/லூ)
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), எஸ். இரவி (இந்)
ஆட்ட நாயகன்: கிரிஸ் ஜோர்டான் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக ஆப்கானித்தானின் ஆட்டம் 36.2 நிறைவுகளில் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 25 நிறைவுகளில் 101 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

14 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
இசுக்காட்லாந்து 
130 (25.4 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
133/3 (15.2 நிறைவுகள்)
மாட் மச்சன் 40 (35)
மிட்செல் ஸ்டார்க் 4/14 (4.4 நிறைவுகள்)
மைக்கல் கிளார்க் 47 (47)
ராபர்ட் டெய்லர் 1/29 (5 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மிட்செல் ஸ்டார்க் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.

பிரிவு ஆ

மேலதிகத் தகவல்கள் அணி, வி ...
15 பெப்ரவரி
14:00 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
339/4 (50 நிறைவுகள்)
 சிம்பாப்வே
277 (48.2 நிறைவுகள்)
மில்லர் 138* (92), டுமினி 115 (100)
கமுன்கொசி 1/34 (8 நிறைவுகள்)
மசகட்சா 80 (74)
இம்ரான் தாஹிர் 3/36 (10 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 62 ஓட்டங்களால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன்
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: டேவிட் மில்லர் (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • ஒருநாள் போட்டி ஒன்றில் 5வது இழப்பிற்கு அதிக ஓட்டங்களைப் (256*) பெற்ற இணையாக மில்லர், டுமினி ஆகியோர் சாதனை படைத்தனர்.

15 பெப்ரவரி
14:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
300/7 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
224 (47 நிறைவுகள்)
விராட் கோலி 107 (126)
சொகைல் கான் 5/55 (10 நிறைவுகள்)
அகமது செசாத் 47 (73)
முகம்மது சமி 4/35 (9 நிறைவுகள்)
இந்தியா 76 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு ஓவல் அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.

16 பெப்ரவரி
11:00
ஓட்டப்பலகை
 அயர்லாந்து
307/6 (45.5 நிறைவுகள்)
லென்டில் சிம்மன்சு 102 (84)
ஜியார்ஜ் டோக்ரெல் 3/50 (10 நிறைவுகள்)
அயர்லாந்து 4 இழப்புகளால் வெற்றி
சாக்சுட்டன் ஓவல் அரங்கம், நெல்சன்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: பவுல் ஸ்டேர்லிங் (அயர்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.

19 பெப்ரவரி
11:00
ஓட்டப் பலகை
சிம்பாப்வே 
286/6 (48 நிறைவுகள்)
சாயிமான் அன்வர் 67 (50)
டென்டை சத்தாரா 3/42 (10 நிறைவுகள்)
சேன் வில்லியம் 76* (65)
மொகமது தக்கீர் 2/51 (9 நிறைவுகள்)
சிம்பாப்வே 4 இலக்குகளால் வெற்றி
சாக்சுட்டன் ஓவல் அரங்கம், நெல்சன்
நடுவர்கள்: யோகன் கிளோட்டு (தெ.ஆ) , கிறிசு காஃபனே (நியூசி)
ஆட்ட நாயகன்: சேன் வில்லியம் (சிம்)
  • சிம்பாப்வே அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பாடியது.
  • ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் வரலாற்றிலேயே மிகக் கூடுதலான ஒருநாள் துடுப்பாட்ட ஓட்டங்களை எடுத்தது.

21 பெப்ரவரி
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
 பாக்கித்தான்
160 (39 நிறைவுகள்)
தினேசு ராம்தின் 51 (43)
ஹரிசு சொகைல் 2/62 (9 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 150 ஓட்டங்களால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (மேற்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் பாக்கித்தானுக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

22 பெப்ரவரி
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
307/7 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
177 (40.2 நிறைவுகள்)
இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்போர்ன்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), அலீம் தர் (பாக்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான்
  • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
  • உலகக்கிண்ணப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவின் முதல் வெற்றி இதுவாகும்.

24 பெப்ரவரி
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
 சிம்பாப்வே
289 (44.3 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் அணி 73 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
மனுக்கா நீள்வட்ட அரங்கம், கான்பரா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி) இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (மேற்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
  • மழை காரணமாக சிம்பாப்வே அணியில் இலக்கு 48 ஓவர்களுக்கு 363 ஆகக் குறைக்கப்பட்டது.
  • ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் 9,000 ஓட்டங்களைக் கடந்தார். மேற்கிந்திய அணியில் பிறயன் லாறாவிற்கு அடுத்ததாக இவர் இச்சாதனையைப் படைத்தார்.[35] அத்துடன் உலகக்கிண்னப் போட்டி ஒன்றில் இரட்டை நூறு அடித்த முதலாவது வீரர் ஆனார்.[36]

25 பெப்ரவரி
13:30 (ஒசநே+10:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஐக்கிய அரபு அமீரகம் 
278/9 (50 நிறைவுகள்)
 அயர்லாந்து
279/8 (49.2 நிறைவுகள்)
சைமான் அன்வர் 106 (83)
பவுல் ஸ்டேர்லிங் 2/27 (10 நிறைவுகள்)
கேரி வில்சன் 80 (69)
அம்ஜத் ஜாவெத் 3/60 (10 நிறைவுகள்)
அயர்லாந்து 2 இழப்புகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: கேரி வில்சன் (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சைமான் அன்வர் உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் நூறு அடித்த முதலாவது அமீரக வீரர் ஆனார்.[37]

27 பெப்ரவரி
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
408/5 (50 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 257 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (தென்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
  • ஏ பி டி வில்லியர்ஸ் (தென்) ஒருநாள் போட்டி ஒன்றில் அதிவிரைவாக 150 ஓட்டங்களைப் (64 பந்துகளில்) பெற்றார்.[38]

28 பெப்ரவரி
14:30 (ஒசநே+08:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஐக்கிய அரபு அமீரகம் 
102 (31.3 நிறைவுகள்)
 இந்தியா
104/1 (18.5 நிறைவுகள்)
சைமான் அன்வர் 35 (49)
ரவிச்சந்திரன் அசுவின் 4/25 (10 நிறைவுகள்)
ரோகித் சர்மா 57* (55)
முகமது நவீட் 1/35 (5 நிறைவுகள்)
இந்தியா 9 இழப்புகளால் வெற்றி
மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), மைக்கேல் கஃப் (இங்)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடியது.

1 மார்ச்
13:30 (ஒசநே+10:00) (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
235/7 (50 நிறைவுகள்)
 சிம்பாப்வே
215 (49.4 நிறைவுகள்)
மிஸ்பா-உல்-ஹக் 73 (121)
தென்டாய் சட்டாரா 3/35 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 20 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), ஜொயெல் வில்சன் (மேற்)
ஆட்ட நாயகன்: வகாப் ரியாஸ் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது.

3 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
411/4 (50 நிறைவுகள்)
 அயர்லாந்து
210 (45 நிறைவுகள்)
அசீம் ஆம்லா 159 (128)
ஆன்ட்ரூ மெக்பிரைன் 2/63 (10 நிறைவுகள்)
ஆன்ட்ரூ பால்பெர்னி 58 (71)
கைல் அபொட் 4/21 (8 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 201 ஓட்டங்களால் வெற்றி
மனுக்கா அரங்கம், கான்பரா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: அசீம் ஆம்லா (தென்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
  • தென்னாப்பிரிக்கா இரண்டு அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் 400இற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்த முதல் அணியாகும்.

4 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
339/6 (50 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
210/8 (50 நிறைவுகள்)
அகமது செசாத் 93 (105)
மஞ்சுளா குருகே 4/56 (8 நிறைவுகள்)
சைமான் அன்வர் 62 (88)
சாகித் அஃபிரிடி 2/35 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 129 ஓட்டங்களால் வெற்றி
மக்ளீன் பூங்கா, நேப்பியர்
நடுவர்கள்: யொகான் கிளீட் (தென்), எஸ். இரவி (இந்)
ஆட்ட நாயகன்: அகமது செசாத் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரக அணி முதலில் களத்தடுப்பாடியது.

6 மார்ச்
14:30 (ஒசநே+08:00) (ப/இ)
ஓட்டப்பலகை
 இந்தியா
185/6 (39.1 நிறைவுகள்)
இந்தியா 4 இழப்புகளால் வெற்றி
மேற்கு ஆத்திரேலிய அரங்கு, பேர்த்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
  • உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியா தனது 8-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.[39]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது..[40]

7 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
222 (46.4 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
202 (33.3 நிறைவுகள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 77 (58)
ரகாத் அலி 3/40 (8 நிறைவுகள்)
பாக்கித்தான் 29 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
ஈடன் பூங்கா, ஆக்லன்ட்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: சப்ராஸ் அகமது (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடியது.
  • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 47 நிறைவுகள் கொடுக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 232 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

7 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
அயர்லாந்து 
331/8 (50 நிறைவுகள்)
 சிம்பாப்வே
326 (49.3 நிறைவுகள்)
எட்மன் ஜோய்ஸ் 112 (103)
தெண்டாய் சட்டாரா 3/61 (10 நிறைவுகள்)
அயர்லாந்து 5 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: எட்மன் ஜோய்ஸ் (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • இப்போட்டியின் முடிவுகளை அடுத்து சிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தன.

10 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
அயர்லாந்து 
259 (49 நிறைவுகள்)
 இந்தியா
260/2 (36.5 நிறைவுகள்)
ஷிகர் தவான் 100 (85)
ஸ்டுவர்ட் தொம்சன் 2/45 (6 நிறைவுகள்)
இந்தியா 8 இழப்புகளால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடியது.

12 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
341/6 (50 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
195 (47.3 நிறைவுகள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 99 (82)
முகம்மது நவீத் 3/63 (10 நிறைவுகள்)
சுவப்னில் பட்டீல் 57* (100)
ஏ பி டி வில்லியர்ஸ் 2/15 (3 ஒவர்கள்)
தென்னாப்பிரிக்கா 146 ஓட்டங்களால் வெற்றி
வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம், வெலிங்டன்
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரக அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து தென்னாப்பிரிக்க அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

14 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
சிம்பாப்வே 
287 (48.5 நிறைவுகள்)
 இந்தியா
288/4 (48.4 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி
ஈடன் பூங்கா, ஓக்லாந்து
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ) புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
  • சுரேஷ் ரைனா, மகேந்திரசிங் தோனி இருவரும் இணைந்து எடுத்த 196 ஓட்டங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவின் 5-ஆவது இழப்பிற்கான அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.

15 மார்ச்
11:00 (ஒசநே+13:00)
ஓட்டப்பலகை
ஐக்கிய அரபு அமீரகம் 
175 (47.4 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
176/4 (30.3 நிறைவுகள்)
நசீர் அசீசு 60 (86)
ஜேசன் ஹோல்டர் 4/27 (10 நிறைவுகள்)
ஜோன்சன் சார்ல்சு 55 (40)
அம்ஜத் ஜாவெட் 2/29 (8 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 6 இழப்புகளால் வெற்றி
மக்ளீன் பூங்கா, நேப்பியர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: ஜேசன் ஹோல்டர் (மேற்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடியது.

15 மார்ச்
14:00 (ஒசநே+10:30) (ப/இ)
ஓட்டப்பலகை
அயர்லாந்து 
237 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
241/3 (46.1 நிறைவுகள்)
பாக்கித்தான் 7 இழப்புகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல) மராயிஸ் எராஸ்மஸ் (தென்)
ஆட்ட நாயகன்: சப்ராஸ் அகமது (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடியது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து அயர்லாந்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள், பாக்கித்தான் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

வெளியேறும் நிலை

காலிறுதிகள் அரையிறுதிகள் இறுதி
         
அ3  இலங்கை 133
ஆ2  தென்னாப்பிரிக்கா 134/1
 தென்னாப்பிரிக்கா 281/5
 நியூசிலாந்து 299/6
அ1  நியூசிலாந்து 393/6
ஆ4  மேற்கிந்தியத் தீவுகள் 250
 நியூசிலாந்து 183
 ஆத்திரேலியா 186/3
ஆ3  பாக்கித்தான் 213
அ2  ஆத்திரேலியா 216/4
 ஆத்திரேலியா 328/7
 இந்தியா 233
ஆ1  இந்தியா 302/6
அ4  வங்காளதேசம் 193

காலிறுதி

18 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
133 (37.2 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
134/1 (18.0 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: இம்ரான் தாஹிர் (தென்)

19 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
302/6 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
193 (45.0 நிறைவுகள்)
ரோகித் சர்மா 137 (126)
தஸ்கின் அகமது 3/69 (10 நிறைவுகள்)
நசீர் ஒசைன் 35 (34)
உமேஸ் யாதவ் 4/31 (9 நிறைவுகள்)
இந்தியா 109 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
  • மகேந்திரசிங் தோனி தலைவராக விளையாடி வெற்றி பெற்ற 100வது ஒருநாள் போட்டி இதுவாகும்.[46]

20 மார்ச்
14:00 (ஒசநே+10:30) (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
213 (49.5 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
216/4 (33.5 நிறைவுகள்)
ஹரிஸ் சொகைல் 41 (57)
ஜோசு ஆசில்வுட் 4/35 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 6 இழப்புகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தென்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: ஜோசு ஆசில்வுட் (ஆசி)

21 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
393/6 (50 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
  • ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதலாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும், உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற முதலாவது மட்டையாளர் என்ற சாதனையையும் மார்ட்டின் கப்தில் நிகழ்த்தினார்.[48]

அரையிறுதி

24 மார்ச்
14:00 (ஒசநே+13:00) (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
281/5 (43 நிறைவுகள்)
 நியூசிலாந்து
299/6 (42.5 நிறைவுகள்)
நியூசிலாந்து 4 இழப்புகளால் வெற்றி (ட/லூ)
ஈடன் பூங்கா, ஓக்லாந்து
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிராண்ட் எலியட் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
  • மழை காரணமாக ஆட்டம் 43 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது. நியூசிலாந்தின் வெற்றி இலக்கு 298 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[49]

26 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
328/7 (50 நிறைவுகள்)
 இந்தியா
233 (46.5 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 105 (93)
உமேஸ் யாதவ் 4/72 (9 நிறைவுகள்)
ஆத்திரேலியா 95 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
  • ஆத்திரேலியா 7வது தடவையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதி

29 மார்ச்
14:30 (ஒசநே+11:00) (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
183 (45.0 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
186/3 (33.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் போக்னர் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
  • ஆத்திரேலியா ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தை வென்றது.[50][51]
  • மைக்கல் கிளார்க் (ஆசி) ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகும்.[52]
  • 93.013 பார்வையாளர்கள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வரலாற்றில் அதிகூடியது ஆகும்.[53]

புள்ளிவிவர சிறப்புக் கூறுகள்

அதிக ஓட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆட்ட வீரர், அணி ...

அதிக இலக்குகள்

மேலதிகத் தகவல்கள் ஆட்டவீரர், அணி ...

ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவோர்

2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் பின்வருவோர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்:

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads