குய்மெட் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2]
வரலாறு


பிரான்சு நாட்டின் தொழிலபதிபர் எமிலி எட்டினே குய்மெட் என்பவரால், குய்மெட் அருங்காட்சியகம் 1879ல் முதலில் லியோன் நகரத்தில் நிறுவப்பட்டது. [3] பின்னர் இவ்வருங்காட்சியகம் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 1889ல் மாற்றப்பட்டது.[4]
1876ல் பிரான்சு நாட்டு அரசால் எமிலி எட்டினே குய்மெட், பிரான்சு நாட்டின் காலனியாதிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குய்மெட், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா [5] மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பயணித்து, அந்தந்த நாடுகளில் கிடைத்த தொல்லியல் கலைப்பொருட்களை சேகரித்து, அவைகளை தனது குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார.
மேலும் ஆப்கானித்தான் அருங்காட்சியகம் மற்றும் கிரேக்க பாக்திரியா, இந்தோ சிதியன் பேரரசு காலத்திய அரிய தொல்லியல் கலைப்பொருட்களை இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
Remove ads
அருங்காட்சியகத்தின் தொல்லியல் கலைப்பொருட்கள்
கிரேக்க – பௌத்தக் கலைப்பொருட்கள்
- கலைநயத்துடன் கூடிய தூண், வடக்கு ஆப்கானித்தான்
- முதலாம் நூற்றாண்டின் புத்தர் சிலை, கந்தகார்
- கிமு 2-ஆம் நூற்றாண்டு, சிற்பங்களுடன் கல் தட்டு
- மது அருந்தி இசைக்கும் கூட்டம், அட்டா, காந்தாரம், 1-2-ஆம் நூற்றாண்டு
- புத்தரின் உருவம் பொறித்த கொரிந்தியர்களின் முத்திரை, 2ம் நூற்றாண்டு, சூர்க் கோட்டல், ஆப்கானித்தான்
- பௌத்த நினைவுச் சின்னத்தை தூக்கும் கிரேக்க கடவுள் அட்லஸ், ஹட்டா, ஆப்கானித்தான்
- பிக்குகளுடன் காட்சியளிக்கும் புத்தர், 2-3ம் நூற்றாண்டு, 2-3ம் நூற்றாண்டு,கந்தகார்
- கிபி 3ம் நூற்றாண்டில் அட்டா, ஆப்கானித்தானில் கிடைத்த சிற்பங்கள்
- தர்மராஜிகா தூபியில் கிடைத்த சிலை, சர்கப், பாகிஸ்தான்
செரிந்தியன் தொல்லியல் கலைப்பொருட்கள்
- சுடுமண்னால் ஆன போதிசத்துவரின் தலைச் சிற்பம், 6-7ம் நூற்றாண்டு, தும்சுக்,சிஞ்சியாங்
சீனாவின் தொல்லியல் கலைப்பொருட்கள்
- ஆன் அரசமரபு குதிரை (முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு
- மூன்று புத்தர்கள், கிழக்கு வெய் வம்சம் (534-550), சீனா
- தாங் அரசமரபு வெளிநாட்டு வர்த்தகர்
- படபகுதி குய் சித்தரிப்பு சோக்தியான்ஸ்
- யிசியானில் இருந்து பளபளப்பான மண் உருவம்
- 11, 12 ஆம் நூற்றாண்டுகளில், சொங் அரசமரபைச் சேர்ந்த ஒரு சிங்கம்.
- ஜியாஜிங் பேரரசர் (1521 & ndash; 1567), மிங் அரசமரபு, குதிரையின் மீது சண்டையிடும் ஆண் வடிவம் கொண்ட ஒரு பீங்கான் குடுவை.,
- தாங் அரசமரபு, 8 முதல் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்ட வடிவ தட்டு
- போதிசத்துவரின் குகை ஓவியம் ,மொ-காவோ குகைகள், 900-950 A.D.
இந்தியாவின் தொல்லியல் கலைப்பொருட்கள்
- புத்தர், 2ஆம் நூற்றாண்டு, மதுரா.
- புத்தர் குப்தர்கள் காலம், 5ஆம் நூற்றாண்டு, மதுரா.
- புத்தரின் தலை,குப்தர்கள் காலம், 6ஆம் நூற்றாண்டு
- ரிசபனாந்தா, மணற்கல், மத்தியப் பிரதேசம், சண்டேலா காலம், 10-11ம் நூற்றாண்டு
- புத்தர் மற்றும் போதிசத்துவர், 11ம் நூற்றாண்டு, பாலப் பேரரசு.
- விஷ்ணு - இந்து கடவுள், மத்தியப் பிரதேசம், 11-12ம் நூற்றாண்டு
- ரிசபனாந்தா, 11-12ம் நூற்றாண்டு
தென்கிழக்கு ஆசியக் கலைப்பொருட்கள்
- கணேசன் , சியாம் ரீப் கம்போடியா 12-13வது நூற்றாண்டு
- மான்ஸ் இனக்குழுவின் சட்ட சக்கரம் (தர்மசக்கரம்), 8ம் நூற்றாண்டின் ஒரு கலை வடிவம்
- A Cambodian Buddha, 14th century
- போதிசத்துவர் லோகேச்வரர், கம்போடியா 12ம் நூற்றாண்டு.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads