எல்மந்து மாகாணம்

ஆப்கானிஸ்தான் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

எல்மந்து மாகாணம்
Remove ads

எல்மந்து அல்லது ஹில்மந்து அல்லது ஹெல்மந்து என்னும் மாகாணம், ஆப்கானிஸ்தானில் உள்ளது. இது பரப்பளவில் பெரிய மாகாணமாகும். இது 58,584 சதுர கிலோமீட்டர்கள் (20,000 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாகாணம் 13 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக ஆயிரக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கு 879,500 மக்கள் குடியிருக்கின்றனர்.[2] இதன் தலைநகரம் லஷ்கர் கா ஆகும்.

விரைவான உண்மைகள் எல்மந்து Helmand هلمند, நாடு ...

இந்த மாகாணத்தில் பாயும் எல்மாந்து ஆறு, நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. கஜாக்கி மாவட்டத்தில் உள்ள கஜாக்கி அணையில் மின் உற்பத்தித் திறன் கொண்டநிலையங்கள் உள்ளன.

இங்கு புகையிலை, பருத்தி, எள், கோதுமை, சோளம், சூர்யகாந்தி, உருளை, தக்காளி, காளிபிளவர், திராட்சை, தர்பூசணி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.[3]

Remove ads

அரசியல்

இந்த மாகாணத்தின் ஆளுநராக மிர்சா கான் ரஹீமீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்த மாகாணத்திலுள்ள லஷ்கர் கா, இதன் தலைநகரமாகும். இங்கு சட்ட ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பு ஆப்கானிஸ்தான் தேசிய காவல்படையைச் ஏரும். எல்லையோரத்தில் ஆப்கான் எல்லைக் காவல் படையினர் பாதுகாக்கின்றனர்.

மக்கள்

2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 879,500 மக்கள் வாழ்கின்றனர்.[2] இங்குள்ள மக்களில் பலர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையினர் ஆவார். பலூச் மக்கள், தஜிக் மக்கள், கசாரா மக்கள் ஆகியோரும் பூர்வ குடியினர் ஆவர்.[4][3] இங்குள்ள அனைவரும் சுன்னி இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர். சிலர் சியா இசுலாம் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

மாவட்டங்கள்

Thumb
ஹெல்மண்டு மாகாணத்திலுள்ள் மாவட்டங்கள்

இந்த மாகாணத்தில் கீழ்க்காணும் மாவட்டங்கள் உள்ளன.[5]

  • பாக்ரான் மாவட்டம்
  • திஷு மாவட்டம்
  • கரம்சிர் மாவட்டம்
  • கஜாக்கி மாவட்டம்
  • கானாஷின் மாவட்டம்
  • லஷ்கர் கா மாவட்டம்
  • மர்ஜா மாவட்டம்
  • முசா கலா மாவட்டம்
  • நடு அலி மாவட்டம்
  • நாஹ்ரி சரஜ் மாவட்டம்
  • நவா-ஈ-பரக்சாய் மாவட்டம்
  • நவ்சாடு மாவட்டம்
  • சங்கின் மாவட்டம்
  • வஷீர் மாவட்டம்

மேலும் பார்க்க

படங்கள்

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads