முபாரக் சா (சையிது வம்சம்)
தில்லி சுல்தானகத்தின் 26வது சுல்தான் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முபாரக் சா (Mubarak Shah) (பிறப்பு முபாரக் கான் ) ( ஆ. 1421–1434 ) டெல்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் இரண்டாவது சுல்தான் ஆவார். இவர் சையிது வம்சத்தை நிறுவிய கிசிர் கானின் மகனாவார்.

Remove ads
வரலாறு
இவர் தனது தந்தை கிசிர் கானுக்குப் பிறகு கி.பி. 1421 இல் அரியணை ஏறினார். முல்தானின் ஆளுநராக இருந்த கிசிர் கான், திறமையான நிர்வாகியாக அறியப்பட்டார். தைமூரின் படையெடுப்பு பயம் காரணமாக இவர் எந்த அரச பட்டத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இவர், முயிஸ்-உத்-தின் முபாரக் சா அல்லது முபாரக் சா என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். இவரது ஆட்சிக்காலத்தில் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு உள்ளூர் முஸ்லிம் தலைவரான ஜஸ்ரத் கோகர், சுல்தானகத்தின் பல பகுதிகளை ஆக்கிரமித்து இறுதியில் 1431 இல் தில்லி சுல்தானகத்தைக் கைப்பற்றினார். ஆனால் பின்னர், 1432 இல் ஏற்பட்ட ஒரு போரில் ஜஸ்ரத் கோகர் தோற்கடிக்கப்பட்டார். மேலும் தில்லியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், தில்லி சுல்தானுக்கு தனது பிரதேசத்தின் பெரும்பகுதியை விட்டுக்கொடுத்தார். எவ்வாறாயினும், இந்த வெற்றிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முபாரக் சா 1434 இல் கொலை செய்யப்பட்டார் . இவருக்குப் பின்னர் இவரது மருமகன் முகமது சா ஆட்சிக்கு வந்தார். [1] [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads