மு. மு. இஸ்மாயில்

From Wikipedia, the free encyclopedia

மு. மு. இஸ்மாயில்
Remove ads

மு. மு. இஸ்மாயில் (பெப்ரவரி 8, 1921 – சனவரி 17, 2005) நீதியரசர்; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர்.

விரைவான உண்மைகள் நீதியரசர் மு. மு. இஸ்மாயில், பிறப்பு ...
Remove ads

பிறப்பு

மு. மு. இஸ்மாயில் நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் 1921, பிப்ரவரி 8ஆம் நாள் பிறந்தார். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை உறவினர்கள் வளர்த்தார்கள்.

கல்வி

இஸ்மாயில் நாகூரில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை (சிறப்பு) பட்டம் (Bachelor of Arts - Honours)பெற்றார். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1945 ஆம் ஆண்டில் சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். கல்லூரியில் தன் பேராசிரியர் கே. சுவாமிநாதனுடன் ஏற்பட்ட உறவால், இஸ்மாயிலுக்கு காந்தியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

பணி

தன்னுடைய ஆரம்ப காலத்தில் சென்னை விவேகானந்த கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1][2]

வழக்குரைஞர்

இஸ்மாயில் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றதும் சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துகொண்டார். 1946 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார்.

தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர்

1959 ஆம் ஆண்டு முதல் 1967 சனவரி வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

சட்ட விரிவுரையாளர்

இஸ்மாயில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் புரிந்தபொழுதே பகுதி நேர சட்ட விரிவுரையாளராக 1946 ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் 1951ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியிலும் பணியாற்றினார்.

கூடுதல் நீதிபதி

இஸ்மாயில் 1967 பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

நீதிபதி

1967 நவம்பர் முதல் 1979 நவம்பர் 5 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

தலைமை நீதிபதி

இஸ்மாயில் 1979 நவம்பர் 6 ஆம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டும் சூலை மாதத்தில் மு. மு. இஸ்மாயிலைக் கலந்தாலோசிக்காமலேயே வேறு மாநிலத்திற்கு மாற்றினார். அதனைக் கண்டித்து 1981 சூலை 8 ஆம் நாள் தன் பதவியைத் துறந்தார்.

தற்காலிக ஆளுநர்

1980 அக்டோபர் 27 ஆம் நாள் முதல் நவம்பர் 4 ஆம் நாள் வரை இஸ்மாயில் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராகப் பணியாற்றினார்.

சட்டக்கமிசன் தலைவர்

2005 ஆம் ஆண்டில் சட்டக் கமிசன் தலைவராகப் பணியாற்றினார்.

சென்னை கம்பன் கழகம்

மு. மு. இஸ்மாயிலுக்கு இளமையிலிருந்தே கம்பராமாயணத்தில் ஈடுபாடு இருந்தது. நாளடைவில் அவ்வீடுபாடு புலமையாக மலர்ந்தது. அதன் விளைவாக 1975 ஆம் ஆண்டில் "தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சி. எம். அழகர்சாமி, பழ. பழனியப்பன் ஆகிய நண்பர்களின் துணையோடு சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். தொடக்க நாள் முதல் தனது மரணம் வரை அவ்வமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

Remove ads

எழுத்துப்பணி

வ.எண்ஆண்டுநூல்வகைபதிப்பகம்குறிப்பு
011945மெளலானா ஆஜாத்வாழ்க்கை வரலாறு
02அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்சமயம்
03இனிக்கும் இராஜநாயகம்சொற்பொழிவுஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள
ஏவி.எம்.ஜாபர்தீன் – நூர்ஜஹான்
அறக்கட்டளைச் சொற்பொழிவு
041957தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி 1 [3]சில கட்டுரைகள்தமிழ் வளர்ச்சிக் கழகம்கலைக்களஞ்சிய கட்டுரையாளர்களில் ஒருவராக இருந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்
051978மும்மடங்கு பொலிந்தனதிறனாய்வுவானதி பதிப்பகம்
061985கம்பன் கண்ட சமரசம்திறனாய்வுவானதி பதிப்பகம்
071987உந்தும் உவகைதிறனாய்வுவானதி பதிப்பகம்
081980இலக்கிய மலர்கள்திறனாய்வுவானதி பதிப்பகம்
091992ஒரு மறக்க முடியாத அனுபவம்திறனாய்வுவானதி பதிப்பகம்கல்கியில் 1985 திசம்பர் 8 இதழில்
தொடங்கி தொடர வெளிவந்தவை
10கம்பன் கண்ட ராமன்திறனாய்வுவானதி பதிப்பகம்
11செவிநுகர் கனிகள்திறனாய்வுவானதி பதிப்பகம்
12வள்ளலின் வள்ளல்வரலாறு
13பழைய மன்றாடிதிறனாய்வுவானதி பதிப்பகம்
14மூன்று வினாக்கள்திறனாய்வுவானதி பதிப்பகம்
15நினைவுச்சுடர்
16தாயினும்…
17உலகப் போக்கு
18நயத்தக்க நாகரிகம்
Remove ads

இலக்கிய ஈடுபாடு

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொது நிகழ்ச்சிகளில் பலமுறை ஸ்ரீராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பற்றி சொற்பொழிவு செய்திருக்கிறார்.அண்ணா சுப்ரமண்யம் மொழிபெயர்த்த உபநிஷத நூல்கள் இவருக்குப் பிடித்தவை. வேதாந்த கேசரி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளின் ஆயுள் சந்தாதாரராக இருந்தவர்.[1]

வெளிநாட்டுப் பயணம்

இஸ்மாயில் ஹாங்காங் நாட்டின் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அழைப்பின்பேரில் 1970 ஆம் ஆண்டு ஹாங்காங் சென்று வந்தார்.

விருதுகள்

மு. மு. இஸ்மாயிலுக்கு அவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கினர். அவை வருமாறு:

வ.எண்ஆண்டுவிருதுஅமைப்பு
011978கம்பராமாயண கலங்கரை விளக்கம்நெல்லை கம்பன் கழகம்
021979டாக்டர்அண்ணாமலை பல்கலைக் கழகம்
031989பால் ஹாரிஸ் பெல்லோஷிப்மதுரை ரோட்டரி சங்கம்
04இயல் செல்வம்
04சேவா ரத்தினம்
061991இராம ரத்தினம்சென்னை நாரத கான சபா
071992கலைமாமணிதமிழ்நாடு அரசு
081997ராமானுஜர் விருதுஆழ்வார் ஆய்வு மையம்
Remove ads

மறைவு

மு. மு. இஸ்மாயில் 2005 சனவரி 17ஆம் நாள் திங்கட் கிழமை சென்னையில் காலமானார்.

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads