மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் மெக்சிக்கோவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை மெக்சிக்கோவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் மெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு (FMF) நிர்வகிக்கிறது. மெக்சிக்கோ அணியின் தாயக விளையாட்டரங்கமாக எசுடேடியோ அசுடெக்கா உள்ளது. தலைமைப் பயிற்றுனராக மிகுயில் எர்ரெரா பணியாற்றுகிறார். பிஃபா உலகத் தரவரிசையில் தற்போது 20வது இடத்தில் உள்ளது.[2] உலக காற்பந்து எலோ தரவரிசையில் 22வதாக உள்ளது.[3]
மெக்சிக்கோ பதினான்கு உலகக்கோப்பைகளில் தகுதிபெற்றுள்ளது; 1994ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தகுதிபெற்று வந்துள்ளது. மெக்சிக்கோ முதல் உலகக்கோப்பையின் சூலை 13, 1930 அன்று ஆடப்பட்ட முதல் ஆட்டத்திலேயே பிரான்சுடன் விளையாடியுள்ளது. இந்த அணியின் சிறந்த வெளிப்பாடாக மெக்சிக்கோவில் நடத்தப்பட்ட இரு உலகக்கோப்பைகளிலும், 1970, 1980, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு மண்டலத்தின் வரலாற்றில் மிகவும் சிறந்த தேசிய அணியாக விளங்குகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஃபிஃபா அங்கீகரித்த கோப்பை ஒன்றை வென்ற ஒரே அணியாக மெக்சிக்கோ விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் ஒருமுறையும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு போட்டிகளில் ஒன்பது முறையும் வென்றுள்ளது.
மெக்சிக்கோ வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் இருந்தாலும் கோபா அமெரிக்காவில் விளையாட அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் இருமுறை இரண்டாமிடத்திற்கும் மூன்று முறை மூன்றாமிடத்திற்கும் பதக்கம் வென்றுள்ளது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads