மெராடோங் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெராடோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Meradong; ஆங்கிலம்: Meradong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் பிந்தாங்கூர் (Bintangor).
மெரடோங் மாவட்டம் 719 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம் சரவாக் மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக அறியப்படுகிறது. இது சரிக்கே மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
Remove ads
பொது
மாவட்டத்தின் மையத்தில் பாயும் ஆற்றின் பெயரில் இருந்து மெராடோங் என்ற பெயர் வந்தது. சனவரி 24, 1984 அன்று, இந்த மாவட்டத்தின் பெயர் மெராடோங் மாவட்டம் என மாற்றப்பட்டது.[2]
13 பிப்ரவரி 1984 தேதியிட்ட சரவாக் அரசாங்க அரசிதழ் பகுதி II, தொகுதி:XXXIX, எண்.4 (Sarawak Government Gazette Part II, Vol:XXXIX, No.4) வழியாக மாவட்டத்தின் பெயர் மாற்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
பிந்தாங்கூர் நகரம், மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். பிந்தாங்கூர் நகரில் நான்கு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.[3]
Remove ads
கல்வி
மெராடோங் மாவட்டத்தில் 32 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 18 தேசியப் பள்ளிகள் (SK); மற்றும் 14 தேசிய வகை பள்ளிகள் (SJK(c).
மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் (Malaysian Teachers Education Institute) இராஜாங் வளாகம், பிந்தாங்கூர் நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads