மேற்கத்திய டிராகோபான்

ஒரு பறவை வகை From Wikipedia, the free encyclopedia

மேற்கத்திய டிராகோபான்
Remove ads

மேற்கத்திய டிராகோபான் (western tragopan) என்பது ஒரு ஒரு நடுத்தர அளவுள்ள கோழி இனத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை வடக்கு பாக்தித்தானில் உள்ள இமயமலைப் பகுதியான ஹசாராவில் இருந்து கிழக்கில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம்வரையிலான பகுதியில் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இமயமலைப்பகுதி முழுக்கக் காணப்பட்ட இந்த இனப் பறவைகள் மிகவும் அருகிப்போய் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. வண்ணமிகு இப்பறவைகளில் ஆண் பறவை செந்நிறத்தில் வட்ட வடிவ வெண்புள்ளிகள் கொண்டு அழகாக இருக்கும். முகம் செந்நிறத்திலும், தொண்டைப்பகுதி நீல நிறத்திலும் இருக்கும். பெண்பறவைகள் சாம்பல் நிறத்தில் கருப்பு வெள்ளைப் புள்ளிகள் கொண்டிருக்கும். இது இமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப்பறவையாகும்.

விரைவான உண்மைகள் மேற்கத்திய டிரேகோபான், காப்பு நிலை ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads