மேற்கு கோதாவரி மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம், ஆந்திர பகுதியில் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் பீமாவரத்தில் அமைந்துள்ளது.[3] இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் நிலவியல் பரப்பளவு 7,742 கி.மீ. என அளவிடப்பட்டுள்ளது. இம்மாவடத்தின் மொத்த மக்கள் தொகை, 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 3,936,966 ஆகும். இதன் மேற்கில் கிருஷ்ணா மாவட்டமும், கிழக்கில் கிழக்கு கோதாவரி மாவட்டமும், தெற்கே வங்காள விரிகுடாவும், வடக்கில் தெலுங்கானா மாநிலமும் அமைந்து, நில, நீர் எல்லைகளால் சூழப்பட்டுள்ளது.[4]
Remove ads
மாவட்டம் பிரிப்பு
4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய ஏலூரு மாவட்டம் நிறுவப்பட்டது.[5][6]
வரலாறு
கிழக்கு சாளுக்கியர்கள், 700 முதல் 1200 வரை கடலோர ஆந்திராவை ஆட்சி செய்தனர். அப்பொழுது வெங்கியுடன் பெடவேகி கிராமத்திற்கு அருகில், அவர்களின் தலைநகர் அமைந்து இருந்தது. பெடவேகி மற்றும் குண்டுப்பள்ளி ஜிலகரகுடம் கிராமங்களில், இதற்குரிய வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன. எலுரு பின்னர் கலிங்கப் பேரரசின் ஒரு பகுதியாக, 1471 வரை இருந்தது. அதன் பின்னர், அது கஜபதிகளின் கைப் பற்றி ஆட்சி நடத்தினர். 1515 இல், ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் இ்ந்த நிலப்பகுதியைக் கைப்பற்றினார். இறுதியாக, விஜயநகர இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்நிலப்பகுதியினை கோல்கொண்டாவின் சுல்தான், குதுப் ஷா ஆட்சி செய்தார்.[7]
1925 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்15 ஆம் நாள், மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவுடன் அதன் தலைமையகமாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், அனைத்து மாவட்ட அலுவலகங்களும், வட்டார அலுவலகங்களும் எலுரு நகரில் அமைக்கப்பட்டன.[8] மேற்கு கோதாவரி மாவட்டம், 1925 ஆம் ஆண்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி பழைய கோதாவரி மாவட்டத்தில் இலிருந்து உருவாக்கப்பட்டது. கோதாவரி மாவட்டம் பின்னர், கிழக்கு கோதாவரி மாவட்டம் எனப்பெயர் மாற்றப்பட்டது. இந்த புதிய மாவட்டத்திற்கு, மேற்கு கோதாவரி மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.[9]
ஆங்கிலேயர்கள், மெட்ராஸ் ராஜதானியில் மசுலீபட்டணத்தை மையமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டனர். 1794-ல் காகினாடவிலும் ராஜமுந்திரியிலும் இரண்டு ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1859-ல் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. 1925 ஏப்ரல் 15 அன்று கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாக பிரித்தும், புதிதாக மேற்கு கோதாவரி மாவட்டத்தை அமைத்தும் சென்னை அரசு முடிவெடுத்தது. முந்தைய கோதாவரி மாவட்டத்தின் பெயர் கிழக்கு கோதாவரி மாவட்டம் என பெயர் மற்றப்பட்டது.
Remove ads
ஆட்சிப் பிரிவுகளும் தொகுதிகளும்
ஆட்சிப் பிரிவுகள்

இம்மாவட்டத்தை 19 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[10]
தொகுதிகள்
இதன் தலைநகரம் பீமவரம் ஆகும். இம்மாவட்டத்தை 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகள் நரசாபுரம் மக்களவை தொகுதிகளில் உள்ளன.[11]
7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.




சுற்றுலா
பீமவரத்தில் பஞ்சாராமர் கோயில் (ஸோமாராமம்), பால்கொல்லில் பஞ்சாராமர் கோயில் (க்ஷீராராமம்), சின்னத் திருப்பதி எனப்படும் துவாரகா திருமலையும், படட்டிசீமையில் உள்ள ஶ்ரீ வீரபத்திரர் திருக்கோயில் ஆகிய புகழ் பெற்ற இந்து கோயில்களாகக் கருதப்படுகின்றன. கொல்லேரு ஏரியும், பாபி மலையும், சின்ன திருமலையும் கண்கவர் காட்சிகளைத் தன்னகத்தே உடைய சுற்றுலா இடங்களாக அமைந்துள்ளது. நரசபுரம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெருபாலம் கடற்கரையும், சர் ஆர்தர் காட்டன் பேரேசும், ஹேவ்லாக் பாலமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கிறது. ராஜமுந்திரி விமான நிலையத்தைப் பன்னாட்டு வானூர்தி நிலையமாக மேம்பாடு செய்வதில் ஆர்வமாக உள்ளது. அவ்வாறு மாறினால், வெளிநாட்டுப் பயணிகளாலும், இம் மாவட்டம் சுற்றுலாவுக்கு முக்கிய இடம் பெறும். கோதாவரி மாவட்டங்களின் சுற்றுலா இடங்களைக் காண, ராஜமுந்திரி விமான நிலையத்திலிருந்து, உலங்கு வானூர்திச் சுற்றுலாவும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பொருளாதாரத்தினை பெருக்க தனித்திட்டமும் வகுத்து வருகிறது.
Remove ads
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads