கடற்கரை ஆந்திரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடற்கரை ஆந்திரா என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இதனை ஆந்திரா என்றும் கோஸ்டா என்றும் அழைப்பார்கள். ஆந்திரப் பிரதேசத்தின் மற்ற இரு பகுதிகள் இராயலசீமை மற்றும் தெலுங்கானா. இதன் பரப்பளவு 92,906 கி.மீ2, 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுக்கின் படி இப்பகுதியின் மக்கள்தொகை 31,705,092[1]. இப்பகுதி ஆந்திரப் பிரதேசத்தின் கடலை ஒட்டிய அனைத்து மாவட்டங்களையும் கொண்டது. இதன் வட எல்லையில் ஒரிசா மாநிலமும் தென் எல்லையில் தமிழ்நாடும் உள்ளன. சிறீகாகுளம், விசயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மற்றும் நெல்லூர் ஆகியவை இப்பகுதியில் அடங்கியுள்ள மாவட்டங்களாகும்.
தற்போது கம்மம் மாவட்டத்தில் உள்ள பத்ராச்சலம் வருவாய் பிரிவு கடற்கரை ஆந்திராவின் பகுதியான கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்தது. நிருவாக காரணங்களுக்காக 1959ல் இப்பகுதி கம்மம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதைப்போலவே அசுவாரோபேட்டை மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து 1959ல் கம்மம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. சிறந்த விவசாய நிலங்களை உடைய இப்பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளின் கழிமுகங்கள் உள்ளன. அரிசி முதன்மையான பயிராகும். தேங்காய் மற்றும் பருப்பு வகைகளும் அதிகளவில் இங்கு பயிரிடப்படுகின்றன.
Remove ads
பெரிய நகரங்கள்
விசாகப்பட்டினம், விசயவாடா, குண்டூர், ராஜமுந்திரி, காக்கிநாடா, நெல்லூர் ஆகியவை இப்பகுதியில் உள்ள பெரிய நகரங்களாகும். பழவேற்காடு ஏரி, கொள்ளேறு ஏரி ஆகியவை இப்பகுதியில் உள்ளன. கொள்ளேறு ஏரி நன்னீர் ஏரியாகும். இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. பழவேற்காடு ஏரி பெரிய உப்பு நீர் ஏரியாகும்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
பெரிய நகரங்கள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads