மைக்கேல் ஜெய்சினோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் ஜெய்சினோ (ஆங்கிலம்: Michael Giacchino) (பிறப்பு:அக்டோபர் 10, 1967) என்பவர் அமெரிக்க நாட்டு இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற துறைகளில் இசை அமைத்து வருகிறார். இவர் தனது இசையப்பயணத்தில் அகாதமி விருது, பிரைம் டைம் எம்மி விருது மற்றும் மூன்று கிராமி விருதுகளைப்[1] பெற்றுள்ளார்.
இவர் ஜே. ஜே. ஏபிரகாம்சு, மாட் ரீவ்ஸ், பீட் டாக்டர், கொலின் டெரெவர்ரோ, ஜோன் வாட்ஸ், துரூ கோடார்ட், தி வச்சோவ்ஸ்கி போன்ற பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். மற்றும் ஜுராசிக் பார்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்,[2] இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்,[3] சூப்பர் 8, டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ், இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் கால் ஆஃப் டியூட்டி மற்றும் மெடல் ஆப் கோனார் போன்ற நிகழ்ப்பட ஆட்டங்களுக்கும், அலைஸ்,[4] லாஸ்ட்,[5] பிரிஞ்சு போன்ற தொலைக்காட்சியை தொடர்களுக்கு இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads