மைத்திரகப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லபி மைத்திரகப் பேரரசு (Maitraka dynasty), (கி. பி 475 முதல் 767 முடிய), மேற்கு இந்தியாவின் குஜராத் மற்றும் இராஜஸ்தான் நிலப்பரப்புகளைக் கொண்டது. குப்த பேரரசில் இருந்த சௌராஷ்டிர பகுதியின் படைத்தலைவர் பதர்கா மைத்திரகப் பேரரசை கி. பி 475இல் நிர்மாணித்தவர். வல்லபி நகரம் பேரரசின் தலைநகராக விளங்கியது. பதர்காவும் அவரது மகன் முதலாம் தாரசேனனும் சேனாதிபதி என்ற பட்டப் பெயருடன் ஆட்சி செய்தனர். மைத்திரகப் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர் துரோணசிம்மன் தன்னை பேரரசனாக முடிசூட்டிக் கொண்டு மைத்திரகப் பேரரசை ஆண்டார்.[1]


மைத்திரகப் பேரரசின் மன்னர் இரண்டாம் தாரசேனன் பேரரசர் ஹர்சவர்தனரின் மகளை மணந்தவர். மன்னர் நான்காம் தாரசேனனின் அவையை சமஸ்கிருத மொழி கவிஞர் பட்டி அலங்கரிதார். மூன்றாம் சிலாதித்தியன் ஆட்சிக் காலத்தில், அரேபியர்கள் தொடர்ச்சியாக மைத்திரகப் பேரரசின் மீது போர் தொடுத்ததால், பேரரசு கி. பி 767இல் வீழ்ச்சி அடைந்தது.
Remove ads
வல்லபி மைத்திரகப் பேரரசர்கள்
- பதர்கா (c. 470-c. 492)
- முதலாம் தாரசேனன் (c. 493-c. 499)
- துரோணசிங்கன் (c. 500-c. 520)
- முதலாம் துருவசேன்ன (c. 520-c. 550)
- தாரபட்டா (c. 550-c. 556)
- குகசேனன் (c. 556-c. 570)
- இரண்டாம் தாரசேனன் (c. 570-c. 595)
- முதலாம் சிலாதித்தியன் அல்லது தர்மாதித்தியன் (c. 595-c. 615)
- முதலாம் காரகிரகன் (c. 615-c. 626)
- மூன்றாம் தாரசேனன் (c. 626-c. 640)
- இரண்டாம் துருவசேனன் அல்லது பாலாதித்தியா (c. 640-c. 644)
- நான்காம் தாரசேனன் (c. 644-c. 651)
- மூன்றாம் துருவசேனன் (c. 651-c. 656)
- இரண்டாம் காரகிரகன் (c. 656-c. 662)
- இரண்டாம் சிலாதித்தியன் (c. 662- ?)
- சிலாதித்தியன் III
- சிலாதித்தியன் IV
- சிலாதித்தியன் V
- சிலாதித்தியன் VI
- சிலாதித்தியன் VII (c. 766-c. 776).
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads