மைய சக்திகள்

From Wikipedia, the free encyclopedia

மைய சக்திகள்
Remove ads

'மைய சக்திகள் அல்லது மையசக்தி நாடுகள் (Central Powers, (இடாய்ச்சு மொழி: Mittelmächte; அங்கேரிய மொழி: Központi hatalmak; துருக்கிய மொழி: İttifak Devletleri or Bağlaşma Devletleri; பல்கேரிய மொழி: Централни сили) என்பது முதலாம் உலகப்போரில் நட்பு நாடுகள் அமைப்புக்கு எதிராகப் போரிட்ட நான்கு நாடுகளின் கூட்டணியாகும். இந்த அமைப்பில் ஜெர்மன் பேரரசு, ஆஸ்திரிய-அங்கேரியப் பேரரசு, உதுமானியப் பேரரசு மற்றும் பல்கேரிய இராச்சியம் ஆகிய பேரரசுகள் அங்கத்துவம் பெற்றன. இந்நாடுகள் நிலை பெற்றிருந்த இடங்களைப் பொருத்து இப்பெயர் பெற்றது. இந்நான்கு நாடுகளும் கிழக்கில் அமைந்த உருசியப் பேரரசு, மேற்கில் அமைந்த மூன்றாம் பிரஞ்சு குடியரசு, மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையில் மத்தியில் வீற்றிருந்தமையால் இப்பெயர் பெற்றது.

விரைவான உண்மைகள்
Remove ads

உறுப்பு நாடுகள்

  • ஆத்திரியா-அங்கேரி ஆஸ்திரிய-அங்கேரியப் பேரரசு; 28 சூலை 1914 இல் போரில் இறங்கியது.
  •  செருமானியப் பேரரசு (ஜெர்மன் காலணி ஆட்சியை உள்ளடக்கியது); 1914 ஆகத்து 1 இல் போரில் இறங்கியது.
  •  உதுமானியப் பேரரசு; 1914 ஆகத்து 2 இல் இரகசியமாகவும், 1914 அக்டோபர் 29 இல் வெளிப்படையாகவும் போரில் இறங்கியது.
  • பல்காரியா பல்கேரிய இராச்சியம்; 1915 அக்டோபர் 14 இல் போரில் இறங்கியது.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads