மொகாலிபுத்த தீசர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொகாலிபுத்த தீசர் (Moggaliputtatissa; கிமு 327–247), பரத கண்டத்தின் மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மகத நாட்டின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் பிறந்த பௌத்த அறிஞரும், பிக்குவும் ஆவார். பேரரசர் அசோகர் சிராவஸ்தியில் கூட்டிய மூன்றாம் பௌத்த சங்கத்திற்கு தலைமை தாங்கியவ்ர்.[1] இவர் தேரவாத பௌத்தப் பிரிவில் விபாஜ்ஜியவாதம் கொள்கையை நிறுவியவர். [2][3] இவரது காலத்தில் பௌத்த சமயத்தில் கலந்திருந்த புத்தரின் கொள்கைக்கு முரணான பல தத்துவப் பிரிவுகளை ஒழித்துக்கட்டி, புத்தரின் உண்மையான தத்துவங்களை மட்டும் மக்களிடையே கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டவர்.[4][5]


உபகுப்தர் இவரது காலத்தவர் ஆவார். இவர் மூன்றாவது பௌத்த சங்கத்தின் போது திரிபிடகத்தை தொகுப்பதில் பங்காற்றியவர். மேலும் இவர் தேரவாத பௌத்த சமயத்தை இலங்கைக்கு பரப்பதற்கு ஒன்பது குழுக்குளை அனுப்ப உதவியாக இருந்தவர்.'[5][6]
மொகாலிபுத்த தீசர் தமது எண்பதாவது வயதில் அசோகரது ஆட்சிக் காலத்தில் காலமானர். இவரது நினைவாக அசோகர் சாஞ்சி தூபியில் பிற அருகதர்களுடன், மொக்காலிபுத்ததிஸ்ஸாவின் உருவத்தை பொறித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads