மொனாக்கோ

From Wikipedia, the free encyclopedia

மொனாக்கோ
Remove ads

மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கி.மீ. (0.76 சதுர மைல்) ஆகும், 2001 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 35,986 ஆகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கி.மீ. ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Thumb
மொனாக்கோ நாட்டின் வரைபடம்
விரைவான உண்மைகள் தலைநகரம், பெரிய Quartier ...

மொனாக்கோ அரசமைப்புக்குட்பட்ட குடியரசாக ஆளப்பட்டு வருகிறது. இதன் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் என்பவராவார். 1297 ஆம் ஆண்டில் இருந்து மொனாக்கோ கிரிமால்டி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 1861 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர். மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது.

சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பரவலாக பிரெஞ்சு மொழியே பேசப்படுகிறது.

Remove ads

வரலாறு

மொனோக்கொவின் பெயர் கி.மு 6ம் நூற்றாண்டில் போகயா பண்டைக் கிரேக்கத்தில் இருந்து வந்தது. லிகுரியான்களால் மொனிக்கொஸ் எனக் குறிப்பிடப்படுகிறது, கிரேக்க மொழியில் "μόνοικος", "single house", from "μόνος" (monos) "alone, single".[10] + "οἶκος" (oikos) "house",[11] மற்ற வகையில் மக்கள் உணர்ச்சிகள் ஒரு வாழ்விடம் அல்லது ஒரு பகுதியில் வாழ்தல் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு பண்டைய தொன்மம் படி, ஹெர்குலஸ் மொனாக்கோ பகுதி வழியாக தாண்டி முந்தைய தேவர்களை திரும்பி பார்க்கச்சென்றார்.[12] இதன் விளைவாக, அங்கு ஹெர்குலசுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் மட்டுமே ஹெர்குலசுக்காக கோயில் கட்டப்பட்டதால் இக் கோயிலை ஹெர்குலசின் "மாளிகை" என அழைக்கப்பட்டது, இதனால் இந்நகரமும் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது.[13][14]

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Monaco, மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads