மொன்செராட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொன்செராட் (Montserrat) கரிபிய கடலில் அமைந்துள்ள சிறிய அண்டிலிசு தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இத்தீவு 11 கி.மீ. (7 மைல்) அகலத்தையும் 16 கி.மீ. (10 மைல்) நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு 40 கிலோமீட்டர்கள் (25 mi) நீளமான கடற்கரையும் காணப்படுகிறது.[1] 1493 ஆம் ஆண்டு புது உலகு நோக்கிய தனது இரண்டாம் பயணத்தின் போது கிரிஸ்டோபர் கொலம்பஸ் இத்தீவுகளுக்கு சுபெயினிலுள்ள மொன்செராட் மலையின் பெயரை இத்தீவுக்கு இட்டார். அயர்லாந்துக் கடற்கரைப்பகுதிகளை ஒத்திருப்பதாலும், ஐரியர்கள் இங்கே வந்து குடியேரியமையாலும் மொன்செராட் பரவலாக கரிபியத்தின் பைம்மணி என அழைக்கப்படுவதுண்டு.
ஜூலை 18, 1995 இல் முன்னதாக உறங்கு எரிமலையான சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக மொன்செராட்டின் தலைநகரம் பிளை மௌத் அழிக்கப்பட்ட்துடன் மண்டலத்தின் மக்கற்தொகையின் மூன்றில் இரண்டுப்பகுதியினர் தீவை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.[2] ஒப்பளவில் குறைந்த அளவுள்ள வெடிப்புகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன. சேதங்கள் பிளைமௌத்த்துக்க் அண்மிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் குவிமாடத்தின் அளவி பெரிதாகி உள்ளபடியால் விலக்கப்பட்ட வட்டாரமொன்று தீவின் தென்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு புதிய விமான நிலையமொன்று தீவின் வட பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads