மோகன் சர்மா
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகன் சர்மா என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் பணிசெய்தார்.
இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 1974இல் வெளிவந்த சட்டகாரி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
Remove ads
பிறப்பும் கல்வியும்
மோகன் சர்மா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் தத்தமங்கலத்திலும் பாலக்காட்டின் சித்தூரிலும் படிப்பினை முடித்தார்.
பின்னர், பூனாவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து நடிப்பில் பட்டம் பெற்றார். நடிப்பில் பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியர் ஆவார்.
விருதுகள்
- கேரள மாநில திரைப்பட விருதுகள்
2010 சிறந்த கதை - கிராமம்
- தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
2017 சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாட்டு அரசின் திரைப்பட விருது - சிறந்த திரைப்படம்
தமிழ்
- அக்கரை பச்சை (1974)
- நாடகமே உலகம் (1977)
- ஜெனரல் சக்ரவர்த்தி (1978)
- ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்) (1979)
- தூண்டில் மீன் (1980)
- நதி ஒன்று கரை மூன்று (1980)
- உயிரோடு உயிராக (1998)
- கண்ணெதிரே தோன்றினாள் (1998)
- சுயம்வரம் (1999 திரைப்படம்) (1999)
- அப்பு (2000)
- தோஸ்த் (2001)
- பிரண்ட்ஸ் (2001)
- ராஜ்ஜியம் (திரைப்படம்) (2002)
- ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே (2002)
- பார்த்திபன் கனவு (2003)
- சச்சின் (திரைப்படம்) (2005)
- தவம் (திரைப்படம்) (2019)
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads