யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாரடி நீ மோகினி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 24 ஏப்ரல் 2017 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 12 ஜூலை 2021 முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான திகில், மீயியற்கை, காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, ஸ்ரீ குமார், நச்சத்திரா, பாத்திமா பாபு, சைத்ரா, யமுனா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் மிக பொருள் செலவில் எடுக்கப்படுள்ள தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
இந்த தொடர் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிகம் பார்க்கும் தொடர்களில் சிறந்த 5 தொடர்களுக்குள் அடங்கும், அதே தருணம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்த தொடரும் இதுவாகும். இந்த தொடர் 22 ஆகத்து 2021 ஆம் ஆண்டு அன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் 1:30 மணி முதல் 3:30 மணி வரை ஒளிபரப்பாகி 1251 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முத்தரசன் தாயை இழந்து சித்தியின் அரவணைப்பில் வளர்கிறான். முத்தரசனின் மனைவி சித்ரா இறக்க, சித்தி நீலாம்பரி தனது அண்ணன் மகளான ஸ்வேதாவை முத்தரசனுக்கு கட்டிவைத்து சொத்தை முழுவதுமாக அடைய திட்டமிடுகிறாள். ஆனால் சிறு வயதிலிருந்தே தன் மாமன் முத்தரசனை திருமணம் செய்ய வேண்டும் என்று அவனையே சுத்தி சுத்தி வருகிறாள், வெண்ணிலா. இதே தருணத்தில் தனது இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கி வெண்ணிலாவையு ம் முத்தரசனையும் சேர்த்து வைக்க நினைக்கும் ஆவி. கேட்டவர்களுக்கு ஆவிக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் ஜெகிக்க போகின்றார்கள் என்பது தான் கதை.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஸ்ரீ குமார் (பகுதி: 271-1251) - முத்தரசன் (முத்து)
- நச்சத்திரா - வெண்ணிலா
- சைத்ரா - ஸ்வேதா
- பாத்திமா பாபு - நீலாம்பரி
- யமுனா - சித்ரா
துணைக் கதாபாத்திரம்
- தீபா - பூங்கோத
- பரத் - மருது
- அரவிந்த் - அழகப்பன்
- பவித்ரன் - கார்த்திக்
- சாலினி ராஜன் - ஜனனி கௌதம்
- சுர்ஜித் - கௌதம்
- அக்சயா - அக்ஷயா
முன்னாள் நடிகர்கள்
- சஞ்சீவ் (பகுதி:1- 270) - முத்தரசன்
- முரளி - அண்ணாமல
- வினிதா - கலை
- பேபி லிசா - ருத்திரா
- மஹிமா தேவி - ராணி
- ஸ்ரீநிதி சுதர்சன் - ஜனனி கௌதம்
Remove ads
மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்று
இந்திய தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
நேர அட்டவணை
இந்த தொடர் 24 ஏப்ரல் 2017 முதல் 21 மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. 22 மார்ச் 2021 முதல் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Remove ads
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads