யுவேந்திர சகல்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யுவேந்திர சகல் (Yuzvendra Chahal (பிறப்பு :சூலை 23, 1990) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலதுகை கழல் திருப்ப பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் அரியானா மாநில அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.[1]
பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அஜந்த மென்டிஸ் மற்றும் சகல் ஆகிய இருவர் மட்டுமே ஒரே போட்டியில் 6 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆசியக் கிண்ணம் 2018 தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[2]
Remove ads
சர்வதேச போட்டிகள்
2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். சூன் 11, 2016 இல் அராரே துடுப்பாட்ட மைதானத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3]
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads