ஆசியக் கிண்ணம் 2018

2018 ஆண்டு ஆசிய கோப்பைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியாக From Wikipedia, the free encyclopedia

ஆசியக் கிண்ணம் 2018
Remove ads

ஆசியக் கிண்ணம் 2018 (2018 Asia Cup) அல்லது யுனிமோனி ஆசியக் கிண்ணம் ( Unimoni Asia Cup)[1] போட்டித் தொடர் 2018 செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடராகும்.[2] இது ஆசியக் கிண்ணத் தொடரின் 14-வது பதிப்பாகும். ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக 1984, 1995 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2016 போட்டியில் வாகையாளராக வெற்றி பெற்ற இந்தியா,[3] இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை மூன்று இலக்குகளால் வென்று மீண்டும் வாகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4]

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...

ஆசியத் துடுப்பாட்ட அவையின் ஐந்து முழு உறுப்பு நாடுகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபெற்றன. அவையாவன: ஆப்கானித்தான், இலங்கை, இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம் ஆகியனவாகும். இவற்றுடன், 2018 ஆசியக் கிண்ணத் தேர்வுச் சுற்றில் வெற்றியடைந்த ஆங்காங் அணியும் பங்குபெற்றது.[5] 2018 உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் பத்தாவதாக வந்ததை அடுத்து, ஆங்காங் அணி ஒருநாள் விளையாட்டுத் தகுதியை 2018 மார்ச்சில் இழந்தது.[6][7] ஆனாலும், 2018 செப்டம்பர் 9 இச்சுற்றில் விளையாடப்படும் அனைத்து ஆட்டங்களுக்கும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒருநாள் தகுதியை வழங்கியது.[8]

ஆரம்பத்தில், இச்சுற்றுப் போட்டி இந்தியாவில் விளையாடுவதாக இருந்தது.[9][10] ஆனாலும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து இப்போட்டிகளை அமீரகத்தில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[2]

குழு 'ஆ' வில், இலங்கை அணி தமது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆப்கானித்தானும், வங்காளதேசமும் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றன.[11][12] குழு 'அ' வில், ஆங்காங் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து, இந்தியாவும், பாக்கித்தானும் சூப்பர் 4 சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.[13]

சூப்பர் 4 சுற்றில், இந்தியா பாக்கித்தானை ஒன்பது இலக்குகளாலும், வங்காளதேசம் ஆப்கானித்தானை மூன்று ஓட்டங்களாலும் வென்றன. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.[14][15] அடுத்த ஆட்டத்தில், வங்காளதேசம் பாக்கித்தானை 47 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[16]

Remove ads

அணிகள்

அரங்குகள்

மேலதிகத் தகவல்கள் ஐக்கிய அரபு அமீரகம், துபாய் ...

குழு நிலை

பிரிவு அ

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...

16 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆங்காங் 
116 (37.1 ஓவர்கள்)
 பாக்கித்தான்
120/2 (23.4 ஓவர்கள்)
ஐசாசு கான் 27 (47)
உசுமான் கான் 3/19 (7.3 ஓவர்கள்)
இமாம்-உல்-ஹக் 50* (69)
ஏசான் கான் 2/34 (8 ஓவர்கள்)
பாக்கித்தான் 8 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: சோன் ஜார்ஜ் (தெஆ), அகமது சா பக்தீன் (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாபர் அசாம் (பாக்) ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,000 ஓட்டங்களைக் கடந்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றார்.[17]

18 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
285/7 (50 ஓவர்கள்)
 ஆங்காங்
259/8 (50 ஓவர்கள்)
ஷிகர் தவான் 127 (120)
கிஞ்சித் சா 3/39 (9 ஓவர்கள்)
நிசாக்கத் கான் 92 (115)
யுவேந்திர சகல் 3/46 (10 ஓவர்கள்)
இந்தியா 26 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: அனீசுர் ரஹ்மான் (வங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கலீல் அகமது (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
  • நிசாக்கத் கான், அன்சுமான் ரத் இணை ஆங்காங் அணிக்காக அதிக ஒருநாள் ஓட்டங்களைப் (174) பதிவு செய்தனர்.[13]

19 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
162 (43.1 ஓவர்கள்)
 இந்தியா
164/2 (29 ஓவர்கள்)
ரோகித் சர்மா 52 (39)
சதாப் கான் 1/6 (1.3 ஓவர்கள்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாக்கித்தானுக்கு எதிரான போட்டியில், எஞ்சியுள்ள பந்துகளின் அடிப்படையில், இந்தியா பெற்ற பெரும் வெற்றி இதுவாகும் (126).[18]

பிரிவு ஆ

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
15 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
261 (49.3 ஓவர்கள்)
 இலங்கை
124 (35.2 ஓவர்கள்)
வங்காளதேசம் 137 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), செட்டிகோடி சம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் இலங்கை அணி வங்காளதேசத்துக்கு எதிரான மிகக்குறைந்த ஓட்டங்களை இப்போட்டியில் பெற்றது[19]

17 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
249 (50 ஓவர்கள்)
 இலங்கை
158 (41.2 ஓவர்கள்)
ரகுமத் சா 72 (90)
திசாரா பெரேரா 5/55 (9 ஓவர்கள்)
உபுல் தரங்க 36 (64)
ரஷீத் கான் 2/26 (7.2 ஓவர்கள்)
ஆப்கானித்தான் 91 ஓட்டங்களால் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), ஆசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: ரகுமத் சா (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இப்போட்டி ஆப்கானித்தானுக்கு எதிரான இலங்கையின் முதலாவது ஒருநாள் தோல்வியாகும்.[11]

20 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
255/7 (50 ஓவர்கள்)
 வங்காளதேசம்
119 (42.1 ஓவர்கள்)
அசுமத்துல்லா சாகிதி 58 (92)
சகீப் அல் அசன் 4/42 (10 ஓவர்கள்)
ஆப்கானித்தான் 136 ஓட்டங்களால் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரஷீத் கான் (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அபு ஐதர் (வங்), நசுமுல் சாண்டோ (வங்) தமது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்.
Remove ads

சூப்பர் 4

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
21 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
173 (49.1 ஓவர்கள்)
 இந்தியா
174/3 (36.2 ஓவர்கள்)
மெகெதி அசன் 42 (50)
ரவீந்திர ஜடேஜா 4/29 (10 ஓவர்கள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

21 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
257/6 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
258/7 (49.3 ஓவர்கள்)
அசுமத்துல்லா சாகிதி 97* (118)
முகம்மது நவாசு 3/57 (10 ஓவர்கள்)
இமாம்-உல்-ஹக் 80 (104)
ரஷீத் கான் 3/46 (10 ஓவர்கள்)
பாக்கித்தான் 3 இலக்குகளால் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சோன் ஜார்ஜ் (தெஆ)
ஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீன் அபிரிதி (பாக்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

23 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
237/7 (50 ஓவர்கள்)
 இந்தியா
238/1 (39.3 ஓவர்கள்)
இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • யுவேந்திர சகல் (இந்) தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[20]
  • ரோகித் சர்மா (இந்) ஒருநாள் போட்டிகளில் 7,000 ஓட்டங்களை எடுத்தார்.[21]
  • இது இந்தியாவின் பாக்கித்தானுக்கு எதிரான (இலக்குகள் வாரியாக) பெரும் வெற்றி ஆகும்.[22]

23 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
249/7 (50 ஓவர்கள்)
 ஆப்கானித்தான்
246/7 (50 ஓவர்கள்)
அசுமத்துல்லா சாகிதி 71 (99)
முசுத்தாபிசூர் ரகுமான் 2/44 (9 ஓவர்கள்)
வங்காளதேசம் 3 ஓட்டங்களால் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நித்தின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: மகுமுதுல்லா ரியாத் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • நசுமுல் இசுலாம் (வங்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • முசாரப் முர்தசா (வங்) தனது 250-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[23]

25 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் 
252/8 (50 ஓவர்கள்)
 இந்தியா
252 (49.5 ஓவர்கள்)
ஆட்டம் சமனில் முடிந்தது.
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), அனீசுர் ரகுமான் (வங்)
ஆட்ட நாயகன்: முகமது சசாத் (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முத்லில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • தீபக் சாகர் (இந்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • மகேந்திரசிங் தோனி (இந்) 200-வது போட்டியில் தலைவராக விளையாடினார்.[24]

26 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
239 (48.5 ஓவர்கள்)
 பாக்கித்தான்
202/9 (50 ஓவர்கள்)
இமாம்-உல்-அக் 83 (105)
முசுத்தாபிசூர் ரகுமான் 4/43 (10 ஓவர்கள்)
வங்காளதேசம் 37 ஓட்டங்களால் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: சோன் ஜார்ஜ் (தெஆ), செட்டிதோடி சம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆசியக்கோப்பையில் பாக்கித்தானுக்கு எதிராக வங்காளதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[25]
Remove ads

இறுதிப் போட்டி

28 செப்டம்பர் 2018
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
222 (48.3 ஓவர்கள்)
 இந்தியா
223/7 (50 ஓவர்கள்)
லித்தன் தாசு 121 (117)
குல்தீப் யாதவ் 3/45 (10 ஓவர்கள்)
இந்தியா 3 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: லித்தன் தாசு (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • லித்தன் தாசு (வங்) தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.[26]
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads