யேல் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யேல் பல்கலைக்கழகம் (Yale University), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாம் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும் ஆகும்.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...

இப் பலகலைக்கழக தெற்காசியவியல் துறை தமிழ் பாடங்களை வழங்குகிறது.[2]

1701 இல், கனெக்டிகட் பகுதியில் நிறுவப்பட்டு, அமெரிக்காவிலேயே பழைய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. காலேஜியேட் ஸ்கூல் எனப் பெயரிடப்பட்டு, 1718 இல், யேல் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுநரான எலிகு யேல் என்பவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில், இதன் உறுப்பான கலை, அறிவியல் பள்ளி, முனைவர் பட்டத்தை வழங்கியது. அமெரிக்காவிலேயே முதலில் முனைவர் பட்டம் வழங்கிய நிறுவனம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.[3] 1900 ஆம் ஆண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டைமைப்பை நிறுவியதில் இந்தப் பல்கலைக்கும் பங்குண்டு. தற்போது 12 கல்லூரிகள் இயங்குகின்றன. இன்னும் இரண்டு வரவுள்ளன.

இங்கு 1,100 ஆசிரியர்களும், 5,300 இளநிலைப் பட்டதாரிகளும், 6,100 முதுநிலைப் பட்டதாரிகளும் உள்ளனர். [4][5] பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு $20.80  பில்லியன் ஆகும். உலகில், அதிகளவு சொத்தைக் கொண்ட கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள நூலகங்களில் 12.5  மில்லியன் நூல்கள் உள்ளன.[6] இதனுடன் தொடர்புடையவர்களில் 51 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆவர். அமெரிக்க பிரதமர்கள், அமெரிக்க நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உட்பட்ட பலர் இங்கு படித்துள்ளனர்.[7]

என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய விளையாட்டுகளில், யேல் புல்டாக்ஸ் என்ற பெயரில் களமிறங்குவர்.

41°18′40″N 72°55′36″W

Remove ads

மாணவர் அமைப்புகள்

இங்கு படிக்கும் மாணவர்கள் பல்வேறு குழுக்களில் பங்கெடுக்கின்றனர். மாணவர்கள் இயக்கும் செய்தித்தாள், வானொலி, இலக்கியக் குழுக்களும், திரைக் குழுக்களும் உள்ளன. யேல் புல்டாக்ஸ் குழுவும் இதில் அடங்கும். யேல் வானொலியை மாணவர்களே இயக்குகின்றனர்.

தடகளம்

Thumb
வால்டர் கேம்ப் வாயில், யேல் தடகள மையம்

இங்கு 35 ஆட்டக் குழுக்கள் உள்ளன. இவ ஐவி லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன. என்.சி.ஏ.ஏ. போட்டிகளிலும் இவை பங்கெடுப்பதுண்டு. விளையாட்டுத் திடல்களும் உள்ளன. பெரிய அளவிலான உடற்பயிற்சியகம் இங்குள்ளது. இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பாய்மரப் படகோட்டம், ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆட்டங்களும் விளையாட்டப்படுகின்றன.

கல்லூரிகள்

இதனுடன் இணைந்த சில தங்கிப் படிக்கும் கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் பெர்க்லி, பிரான்போர்டு, கல்ஹவுன், டாவ்ன்போர்ட், டிரம்புல் ஆகியன குறிப்பிடத்தக்கன.

நிர்வாகம்

தலைவரும், நிர்வாகக் குழுவினரும் இணைந்து பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்றனர். இதன் தலைவர், அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறார்.[8]

கட்டிடங்கள்

  • பேட்டல் ஆலயம்
  • பெய்நெக்கே நூலகம் (அரிய நூல்களைக் கொண்டது)
  • ஹார்க்னஸ் டவர்
  • இங்கல்ஸ் ரிங்க்
  • கிளின் உயிரியல் கட்டிடம்
  • ஆஸ்போர்ன் நினைவு ஆய்வுக்கூடங்கள்
  • பேய்னே விட்னே உடற்பயிற்சியகம்
  • பீபாடி வரலாற்று அருங்காட்சியகம்
  • ஸ்டெர்லிங் மருத்துவ அறை
  • ஸ்டெர்லிங் சட்டக் கட்டிடங்கள்
  • ஸ்டெர்லிங் நினைவு நூலகம்
  • யேல் கலைக்காட்சியம்
  • யேல் கட்டிடக்கலை கட்டிடம்
Remove ads

கல்வி நிறுவனங்கள்

மேலதிகத் தகவல்கள் நிறுவனங்கள் ...

யேல் பல்கலையின் முன்னெடுப்புகளில் சில:

  • உலகளவில் கல்வியை மேம்படுத்த, ஜாக்சன் இன்ஸ்டிடியூட்
  • உலக சுகாதாரத்தை மேம்படுத்த, உலக சுகாதார முன்னெடுப்பு
  • யேல் இந்தியா முன்னெடுப்பு, இந்தியாவுடனான கல்வி உறவை மேம்படுத்த
  • யேல் சீனச் சட்ட மையம், சீனாவில் சட்ட விதிகளை ஊக்குவிப்பதற்காக
  • யேல்- சிலி பல்கலைக்கழகம் கூட்டு - வானியல் ஆய்விற்காக
  • பீக்கிங்-யேல் பல்கலைக்கழகம் கூட்டு - தாவர மரபணுவியல், வேளாண் உயிரியல்
  • டோதாய் - யே முன்னெடுப்பு - ஜப்பானைப் பற்றிப் படிக்க
  • ஃபூடன் - யேல் உயிர்மருத்துவ ஆய்வு மையம் - சாங்காய் நகரில்
  • யேல் -லண்டன் பல்கலைக்கழக கூட்டு
  • பெருவில் யேல் மையம், மச்சு பிச்சு, இன்கா நாகரிகம் பற்றி அறிய
  • சிங்கப்பூர் தேசியப் பல்கலையுடன் கூட்டு - ஆசியாவில் கலைக் கல்வியை மேம்படுத்த
Remove ads

குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்

Thumb
அமெரிக்க நடிகை - மெரில் ஸ்ட்ரீப், 1975, யேல் நாடகக் கல்லூரி
Thumb
அமெரிக்கப் பிரதமர் வில்லியம் டாஃப்ட், 1878 இல் யேல் பல்கலையில் பட்டம் பெற்றார்

யேல் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

இவர்களுள் குறிப்பிடத்தவர்கள்: (பதவியும், பெயரும்)
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads