ரகீம் யார் கான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரகீம் யார் கான் (Rahim Yar Khan), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் தெற்கில் அமைந்த ரகீம் யார் கான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் 9 ஒன்றியக் குழுக்களைக் கொண்டது.[2] இந்நகரம், நாட்டின் தலைநகரமான இஸ்லாமாபாத்திற்கு தென்மேற்கே 789 கிலோமீட்டர் தொலைவிலும்; கராச்சிக்கு வடகிழக்கே 674.8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் அருகில் ரகீம் யார் கான் வான்படை தளம் உள்ளது.
Remove ads
வரலாறு
இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பகவல்பூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக ரகீம் யார் கான் நகரம்[3] இருந்தது.
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ரகீம் யார் கான் நகரத்தின் மக்கள் தொகை 5,19,261 ஆகும்.
கல்வி
- இராணுவப் பொதுப் பள்ளி & கல்லூரி
- பகவல்பூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ரகீம் யார் கான் வளாகம்
- கவாஜா பரீத் பொறியியல் & தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- வணிகம் & வணிக மேலாண்மைக்கான தேசியக் கல்லூரி
- சேக் சையத் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை
போக்குவரத்து

வானூர்தி நிலையம்
ரகீம் யார் கான் நகரத்தில் சேக் சையத் பன்னாட்டு வானூர்தி நிலையம்[4]மற்றும் ரகீம் யார் கான் வான்படை தளம் உள்ளது. 2025 பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையின் போது ரகீம் யார் கான் வானூர்தி நிலையம் பலத்த சேதமடைந்தது.[5][6][7]
தொடருந்து நிலையம்

கராச்சி-பெஷாவர் நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதையில் அமைந்த ரகீம் யார் கான் தொடருந்து நிலையம், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads