ரசுத்தோவ் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

ரசுத்தோவ் மாகாணம்
Remove ads

ரசுத்தோவ் மாகாணம் (Rostov Oblast, உருசியம்: Росто́вская о́бласть, ரஸ்தோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உருசியாவின் தெற்கு நடுவண் மாவட்டத்த்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 100,800 சதுர கிலோமீட்டர் (38,900 சதுர மைல்), மக்கள் தொகை 4,277,976 (2010 கணக்கெடுப்பு),[7] இந்த மாகாணம் மக்கள்தொகையில் உருசிய ஒப்லாசுதுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ தலைநகர் தொன்-மீது-ரசுத்தோவ் ஆகும்.

விரைவான உண்மைகள் ரசுத்தோவ் மாகாணம்Rostov Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

இந்த மாகானத்தின் எல்லைகளாக வடக்கில் உக்ரைன், வோல்கோகிராட் வட்டாரம், வாரனிநோஸ் ஓப்லாஸ்து, தெற்கில் கிராஸ்னதார் பிரதேசம், இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு, ஸ்ட்யாவ்ர்போல் கிழக்கில் கால்மீக்கியா குடியரசு ஆகியவை அமைந்துள்ளன.

ஆறுகள் மற்றும் ஏரிகள்

ஐரோப்பாவின் மிக்பெரிய ஆறுகளில் ஒன்றான தான் ஆறு இந்த ஒப்ளாசுது வழியாக பாய்கிறது. ஒப்பாசுதின் பரப்பளவில் 0.4% நிலப்பரப்பில் ஏரிகள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

ஒப்லாசுதின் மக்கள் தொகை: 4,277,976 ( 2010 கணக்கெடுப்பு ); 4,404,013 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 4,308,654 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 49 715 (1000 ஒன்றுக்கு 11.7)
  • இறப்பு: 59 376 (1000 ஒன்றுக்கு 14.0) [11]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[12]

2009 - 1.38 | 2010 - 1.38 | 2011 - 1.39 | 2012 - 1.51 | 2013 - 1.52 | 2014 - 1.60 (இ)

ஒப்லாசுதில் வாழும் இனக் குழுக்கள்: இந்த பிராந்தியத்தில்157 வேறுபட்ட இனக்குழுவினர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 3.795.607 பேர் உருசியர்கள் : (90.3%); 77.802 பேர் உக்ரைனியர்கள் : (1.9%); 110.727 பேர் ஆர்மேனியர்கள் : (2.6%). 35.902 பேர் துருக்கியர்கள்: (0.9%); 16.493 பெலாரஷ்யர்கள் : (0.4%)); 13.948 தடார்கள் : (0.3%); 17.961 அசிரியர்கள் : (0.4%); 11.449 செசெனியர்கள் : (0.3%); 16657 ரோமா மக்கள் : (0.4%); 11.597 கொரியர்கள் : (0.3%); மற்றும் 8.296 ஜோர்ஜியர்கள் : (0.2%). மற்ற இன-கலாச்சாரக் குழுக்கள் சேர்ந்த மக்கள் 76.498 (1.8%) ஆவர். 76.735 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[13]

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[14][15] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 49.5% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 6% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள்,1% முஸ்லிம்கள் 1% ஸ்லாவிக் நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 26% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 3.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

Remove ads

பொருளாதாரம்

இந்த ஒப்லாசுதுவின் பெரும்பாலான தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்களான உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் கனரகத் தொழில் நிலக்கரி மற்றும் தானுந்து உற்பத்தி போன்ற தொழில்களும் உள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads