ரமேஷ் பொக்ரியால்
உத்தரகாண்டின் 5ஆவது முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரமேஷ் பொக்ரியால் "நிசாங்க்"(Ramesh Pokhriyal "Nishank", செங்கிருதம்: रमेश पोखरियाल "निशंक"; பிறப்பு சூலை 15, 1959[1]), இந்திய அரசியல்வாதியும் இந்தி மொழிப் புலவரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான இவர் இந்தியாவின் பதினாறாவது மக்களவையில் அரித்துவார் மக்களவைத் தொகுதியின் சார்பாக உறுப்பினராக உள்ளார். 2009 முதல் 2011 வரை உத்தராகண்ட மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
Remove ads
இளமை
சூலை 15, 1959 அன்று பரமானந்த் போக்கிரியால் மற்றும் விசுவாம்பரி தேவிக்கு மகனாக (தற்போதைய உத்தராகண்டம்) உத்தரப் பிரதேசத்தின் பௌரி கர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பினானி கிராமத்தில் பிறந்தார்.
அரசியல் வாழ்வு
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை, விதான் சௌதாவிற்கு, முதல்முறையாக 1991ஆம் ஆண்டு கர்ணப்பிரயாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே தொகுதியிலிருந்து 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநில அரசில் 1997ஆம் ஆண்டு உத்தராஞ்சல் வளர்ச்சி அமைச்சராகப் பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டப்பேரவைக்கு தலிசைன் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே தொகுதியிலிருந்து மீண்டும் 2007ஆம் ஆண்டு போட்டியிட்டு இம்முறை வெற்றியடைந்தார்.[1]
முதலமைச்சராக
27 சூன், 2009 உத்தராகண்டத்தின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார்.[2] இம்மாநிலத்தின் மிக இளைய முதலமைச்சர் என்ற பெருமை உடையவர்.
மத்திய அமைச்சராக
இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில், அரித்துவார் மக்களவைத் தொகுதிலியிருந்து வென்று, நரேந்திர மோதியின் அமைச்சரவையில்மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனார்.
இவர் மீண்டும் 30 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக பொறுப்பேற்றார்.[3] 31 மே 2019 அன்று இவருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.
Remove ads
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads