ராஜகிரகம்

From Wikipedia, the free encyclopedia

ராஜகிரகம்
Remove ads

ராஜகிரகம் (Rajgir) (House of the King or Royal House), இந்தியாவின், பிகார் மாநிலத்தில், நாலந்தா மாவட்டத்தில் அமைந்த பண்டைய கால நகரமாகும். மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது. இந்நகரம் பௌத்தம் மற்றும் சமணம் சமயங்களின் மையமாக விளங்கியது.[3] புத்தரும், மகாவீரரும் ராஜகிருகத்தில் தங்களின் போதனைகளை எடுத்துரைத்தனர். புத்தர் இந்நகரத்தின் சிறு மலைக்குச் சென்று அடிக்கடி தியானம் செய்வார். பௌத்தர்களுக்கு இந்நகரம் ஒரு புனித நகரமாகும். மகாபாரத இதிகாசத்தில், இந்நகரை ஆண்ட மன்னன் ஜராசந்தன் கிருஷ்ணரை பகைத்துக் கொண்டவன் என்றும் வீமன் ஜராசந்தனை மற்போரில் கொன்றான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் ராஜகிரகம் राजगीर, நாடு ...

ராஜகிரகம் பாட்னா நகரத்திலிந்து 100 கி மீ தொலைவில் உள்ளது. பாட்னா மற்றும் புதுதில்லியிலிருந்து தொடருந்து மற்றும் பேருந்து வசதியுள்ளது.

Remove ads

மக்கள் தொகை கணக்கெடுப்பு

2011வது மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 41,587 ஆகும். அதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%. எழுத்தறிவு விகிதம் 52%, இது தேசிய சராசரி அளவான 59.5%விட குறைவாகும்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads