ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
பாலு ஆனந்த் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் (Rajadhi Raja Raja Kulothunga Raja Marthanda Raja Gambeera Kathavaraya Krishna Kamarajan) என்பது 1993 ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை பாபு ஆனந்த் இயக்கியிருந்தார். மன்சூர் அலி கான் மற்றும் நந்தினி என்போர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாகேஷ், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் எஸ். எஸ். சந்திரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் 24 ஜூன் 1993 ல் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் தலைப்பு மிக நீளமாக தலைப்பாக தமிழ் திரையுலகில் பார்க்கப்படுகிறது.[1][2][3][4]
Remove ads
கதை
குலோத்துங்கன் (மன்சூர் அலிகான்) ஒரு சாமர்த்தியமான திருடன். காவலர் உடையில் சென்று தனது திருட்டினை மேற்கொள்வான். தான் திருடிய பொருட்களை இராபின் ஊட் போல வசதியற்ற ஏழைகளுக்கு வழங்கி வருகிறான். வழக்கறிஞர்(நாகேஷ்), சுப்ரமணியன் (ஜெய்கணேஷ்) மற்றும் இவரது மனைவி ஷாலு (அபிலாஷா ) ஆகிய மூவரும் ஒரு பெரிய செல்வந்தரின் வாரிசான ராதிகாவின் (நந்தினி), சொத்துகளுக்கு பாதுகாவலர்கள் ஆவர். ஷாலு ராதிகாவின் முழுச் சொத்துகளையும் அடைய நினைத்து சுவாமியின் உதவியுடன் ராதிகாவை போதை மருந்துக்கு அடிமையாக்கி அவளை மனதளவில் பாதிப்படைய விரும்புகிறாள். ஒரு நாள் ராதிகா வீட்டிலிருந்து வெளியேறி குலோத்துங்கனிடம் வந்து சேர்கிறாள். அந்த நேரத்தில் அவன் மது அருந்தியிருந்ததால் ராதிகாவிடம் தவறாக நடந்து கொள்கிறான். இறுதியில் அவளுடைய பாதுகாவலர்கள் அவளைத் தேடிக் கண்டு பிடிக்கின்றர்.
பின்னர், ஷாலு குலோத்துங்கனை ராதிகாவின் கணவனாக நடிக்க வைக்கிறான். அவனும் நடிப்பிற்காக ராதிகாவை மணக்கிறான். பிறகு உண்மை அறிந்த அவன் ஷாலுவிடமிருந்து ராதிகாவைக் காப்பாற்ற முடிவெடுக்கிறான். இதற்கிடையில் குலோத்துங்கனின் எதிரியான ராவுடன் (ஸ்ரீஹரி) சேர்ந்து கொண்டு சுப்பரமணியத்தை கொலை செய்து அந்தப் பழியை குலோத்துங்கன் மேல் போடுகிறாள். நேர்மையான காவல் அதிகாரி குரு சுப்ரமணியன் (நெப்போலியன்) இதை துப்பறிய வருகிறார். பின்னர் என்னவாயிற்று என்பது படத்தின் கதைச் சுருக்கமாகும்.
Remove ads
நடிகர்கள்
- மன்சூர் அலி கான் - குலோத்துங்கன்
- நந்தினி - ராதிகா
- துரைசாமி நெப்போலியன்- குரு சுப்ரமணியன்
- ஸ்ரீஹரி - ராவ்
- உதய் பிரகாஷ்
- நாகேஷ் வக்கீல்
- ஜெய்கணேஷ் - சுப்பிரமணி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - பிச்சுமணி
- எஸ். எஸ். சந்திரன்
- வி. கே. ராமசாமி
- ஆர். சுந்தர்ராஜன்
- விவேக்
- பாண்டு
- இடிச்சப்புளி செல்வராசு
- டிகேஎஸ் நடராஜன்
- வடிவுக்கரசி
- விசித்ரா
- சில்க் ஸ்மிதா
- டிஸ்கோ சாந்தி
- குமரிமுத்து
- குள்ளமணி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads